தலைநகரில் பரபரப்பு.. அப்படியே சரிந்த 4 மாடி கட்டிடம் … 4 பேர் பலி!

Delhi Buliding Collapse : வடகிழக்கு டெல்லியில் முஸ்தபாபாத் பகுதியில் இன்று அதிகாலையில் நான்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் பலர் சிக்கிய இருக்கலாம் என்று கூறுகின்றனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

தலைநகரில் பரபரப்பு.. அப்படியே சரிந்த 4 மாடி கட்டிடம் ... 4 பேர் பலி!

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

Updated On: 

19 Apr 2025 08:41 AM

டெல்லி, ஏப்ரல் 19: டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே நான்கு மாடி கட்டிடம் (Delhi Buliding Collapse) இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த கட்டிடத்தில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள முஸ்தபாபாத் பகுதியி இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

4 மாடி கட்டிடம் இழுந்து விழுந்து விபத்து

தலைநகர் டெல்லியில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதியான நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. கடந்த வாரம் கூட டெல்லியில் புயல் காற்றின் தாக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 19ஆம் தேதியான இன்று அதிகாலை 3 மணியளவில் வடகிழக்கு டெல்லியில் முஸ்தபாபாத் பகுதியில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

4 மாடி கட்டிடம் சுக்கு நூறாக நொறுங்கி உள்ளது. இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிய இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தற்போது இந்த குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை சுமார் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிகாரிகள் கூறுவது என்ன?

சிசிடிவி காட்சி

இந்த விபத்து குறித்து பேசிய வடகிழக்கு மாவட்ட கூடுதல் துணை ஆணையர் சந்தீப் லம்பா, ”இந்த சம்பவம் அதிகாலை 3 மணிக்கு நடந்தது. 14 பேர் மீட்கப்பட்டனர். ஆனால் அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். அது நான்கு மாடி கட்டிடம்… மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 8 முதல் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம்” என்று கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.