ப.சிதம்பரத்துக்கு என்னாச்சு? தூக்கி கொண்டு ஓடிய காங்கிரஸ் தொண்டர்கள்!

P Chidambaram Health Update: குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதிக வெப்பம் காரணமாக அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, மயக்க மடைந்துள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரத்துக்கு என்னாச்சு? தூக்கி கொண்டு ஓடிய காங்கிரஸ் தொண்டர்கள்!

ப.சிதம்பரம்

Updated On: 

09 Apr 2025 07:40 AM

குஜராத், ஏப்ரல் 09: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு (P Chidambaram) திடீரென உடல் நலக்குறைவு (P Chidambaram Health Update) ஏற்பட்டிருக்கிறது. இதனால், தொண்டர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர் அகமதாபாத் வந்திருந்தனர்.

ப.சிதம்பரத்துக்கு என்னாச்சு?

அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அகமதாபாத் 2025 ஏப்ரல் 8ஆம் தேதி வந்தடைந்தார். இந்த நிலையில், சபர்மதி ஆசிரமத்தில் அவருக்கு 2025 ஏப்ரல் 8ஆம் தேதி மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

மேலும், மயக்க நிலையிலும் இருந்துள்ளார். உடனே காங்கிரஸ் தொண்டர்கள் அவரை தூக்கி கொண்டு ஓடினர். இது சம்பந்தமனா வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது  அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்தவர்கள் கூறியுள்ளனர். கடும் வெயில் காரணமாக அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டது. இதனால் இவர் மயக்க மடைந்தார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தூக்கி கொண்டு ஓடிய காங்கிரஸ் தொண்டர்கள்

இதுகுறித்து, ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறுகையில், “அகமதாபாத்தில் கடுமையான வெப்பம் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தனது தந்தை ப.சிதம்பரத்திம் மயக்க மடைந்துள்ளார். அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

“நலமாக இருக்கிறேன்”


இதுகுறித்து ப.சிதம்பரம் சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “அதிக வெப்பம் காரணமாக எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்தன. நான் இப்போது நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டிருந்தார். ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,  மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கேட்டறிந்தனர். பாஜக தேசியத் தலைவரும், மத்திய சுகாதார அமைச்சருமான ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் பி. சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.