குழந்தை கடத்தல்.. மாநிலங்களுக்கு முக்கிய உத்தரவு.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
Child Trafficking: குழந்தை கடத்தல் தொடர்பான நிலுவை வழக்குகளை கிளை நீதிமன்றங்கள் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்கவும், தேவைப்பட்டால் தினசரி விசாரணைகளை நடத்தவும் வேண்டும் என அனைத்து உச்ச நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்
டெல்லி, ஏப்ரல் 16: குழந்தை கடத்தல் தொடர்பான நிலுவை வழக்குகளை கிளை நீதிமன்றங்கள் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தை கடத்தல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 13 குற்றவாளிகளுக்கு வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிட்டது. நாட்டில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
குழந்தை கடத்தல்
இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் குழந்தை கடத்தல் தொடர்பாக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான 13 பேருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 15ஆம் தேதியான் நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிதிபதிகள் பார்த்வாலா அடங்கிய அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்தது.
முக்கிய உத்தரவை போட்ட உச்ச நீதிமன்றம்
அதன்படி, குழந்தை கடத்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், “குழந்தை கடத்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் விசாரணைகளின் நிலை குறித்து தேவையான தரவுகளைச் சேகரிக்க அனைத்து விசாரணை நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படும்.
இது சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் விசாரணைகளை முடிக்கவும், தேவைப்பட்டால் தினசரி விசாரணைகளை நடத்தவும் வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், தனது உத்தரவில், “எந்தவொரு மருத்துவமனையிலிருந்தும் புதிதாகப் பிறந்த குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனைக்கு எதிரான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை உரிமம் கூட ரத்து செய்யப்படும். பிறந்த குழந்தையின் பாதுகாப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே முழு பொறுப்பு” என்று கூறியது.
ஆண்டுதோறும் 3.80 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள் என சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், ஜாமீன் வழங்கிய அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததது. மேலும், “இந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நாட்டில் எங்கிருந்தாலும் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
அவர்கள் குழந்தை கடத்தல் குற்றத்தை தொடர்ந்து செய்துள்ளனர். இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் இரக்கமற்ற முறையில் நடந்துள்ளது. நாங்கள் இதற்கு வருதுகிறோம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.