இந்தியாவிடம், UK கற்றுக்கொள்ள வேண்டும்.. வியந்துப்போன பிரிட்டிஷ் யூடியூபர்!

British Tourist Amazed by Train Food Delivery | இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த சுற்றுலா பயணி ஒருவர், இந்தியாவில் ரயில் பயணத்தின் போது உணவு டெலிவரி செய்யப்படும் அம்சத்தை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார். இது குறித்து அவர், இங்கிலாந்து இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போல பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிடம், UK கற்றுக்கொள்ள வேண்டும்.. வியந்துப்போன பிரிட்டிஷ் யூடியூபர்!

வைரல் வீடியோ

Published: 

11 Apr 2025 12:04 PM

கான்பூர், ஏப்ரல் 11 : இந்தியாவில் ரயிலில் பயணம் செய்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி (British Tourist) ஒருவர், இந்தியாவில் ரயிலில் கிடைக்கும் உணவு டெலிவரி (Food Delivery) வசதி குறித்து வியந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரின் அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இது குறித்து பதிவிட்டுள்ள அவர், யுகே (UK – United Kingdom) இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போல பதிவிட்டுள்ளார். அவர் அப்படி எதை குறித்து வியப்படைந்து இவ்வாறு பதிவிட்டுள்ளார், அவரின் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாக என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவை கண்டு வியப்படைந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி

இந்தியா கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ளது. அதாவது, இந்தியாவில் பல மொழி, கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனி கலாச்சாரம் உள்ள நிலையில், பன்முக தன்மையை அடையாளமாக கொண்ட சிறப்பு வாய்ந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும் நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் உள்ளன. அவற்றை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள ஜார்ஜ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் கிடைக்கும் உணவு சேவை குறித்து வியப்படைந்துள்ளார். இந்தியாவில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக சொமேட்டோ (Zomato) நிறுவனம் ஃபுட் ஆன் ட்ரெயின் (Food On Train) என்ற சேவையை வழங்கி வருகிறது. அதனை பயன்படுத்தி ரயிலில் பயணிக்கும் போது நமக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்துக்கொள்ளலாம். சிலருக்கு ரயில் உணவுகளால் ஒவ்வாமை உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக புகார் எழுந்து வந்த நிலையில், இந்த அசத்தல் திட்டத்தை சொமேட்டோ செயல்படுத்தி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இது குறித்து பதிவிட்டுள்ள ஜார்ஜ், நாங்கள் பயணம் செய்த ரயில், ரயில் நிலையத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நின்றது. ஆனால் அதற்குள்ளாக நாங்கள் ஆர்டர் செய்த உணவு எங்களுக்கு கையில் கிடைத்துவிட்டது என மிகவும் வியப்புடன் பதிவிட்டுள்ளார். இதற்காக தனக்கு உதவி தன்னுடைய சக பயணியான இந்தியர் ஒருவருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜார்ஜ், யுகே இந்தியாவிடம் இருந்து இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை போல The UK needs to take notes in என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.