உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய் – இவரைப் பற்றிய முக்கிய தகவல்கள் இதோ!
B.R.Gavai: இந்தியாவின் 52து தலைமை நீதிபதியாக 2025, மே 14ஆம் தேதி பதவியேற்க உள்ள நீதிபதி பி.ஆர். கவாய்,பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அனுபவசாலி. மகாராஷ்டிராவில் பிறந்த அவர் 1985ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பயணத்தைத் தொடங்கி, அரசு வழக்கறிஞராகவும், பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை தள்ளுபடி செய்த மத்திய அரசின் முடிவை அங்கீகரித்த தீர்ப்பிலும் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஆர்.கவாய்
உச்சநீதிமன்றத்தின் (Supreme Court) தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கண்ணாவின் பதவிகாலம் 2025, மே 13 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் (B.R.Gavai) என்பவரை சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்திருக்கிறார். இதனையடுத்து வருகிற மே 14, 2025 அன்று உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்கவிருக்கிறார். இவர் வருகிற நவம்பரில் ஓய்வு பெறுவார் என்று கூறப்படும் நிலையில் இவர் வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார் என கூறப்படுகிறது. இவர் மகாராஷ்டிரா (Maharastra) மாநிலம் அமராவதி பகுதியை சேர்ந்தவர். இவர் முன்னாள் கேரளா மற்றும் பீகார் மாநில ஆளுநரான ஆர்.எஸ்.கவாயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்த தெரிவித்து வருகின்றனர்.
பிஆர் கவாய் கடந்த 1958 ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை முடித்த அவர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான ராஜா எஸ்.போன்ஸ்லேவிடம் வழக்கிறஞராக பணியாற்றினார். பின்னர் கடந்த 1987 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார். அவர் அரசியல் மற்றும் நிர்வாக பிரிவுகளில் கவனம் செலுத்தினார்.
யார் இந்த பி.ஆர்.கவாய்?
நாக்பூர் மற்றும் அமராவதி மாநகராட்சிகள், அம்ராவதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி மற்றும் பொது நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக பணி செய்தார். பின்னர் 2000ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பம்பாய் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2005ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பதவி பெற்றார். மும்பை, நாக்பூர், ஔரங்காபாத் கிளைகளில் நீதிபதியாக பணியாற்றினார். கடந்த 2019ம் ஆண்டு மே 24 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தி நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
உச்ச நீதிமன்றத்தில் அரசியலமைப்பு அமர்வுகளில் பங்கேற்று, முக்கிய தீர்வுகளை வழங்கியவர். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவை ஏற்கும் தீர்ப்பை வழங்கிய ஐவர் அமர்வில் அங்கம் வகித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுக்களை தள்ளுபடி செய்த மத்திய அரசின் முடிவை அங்கீகரித்த தீர்ப்பிலும் இவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளில் நீதித்துறை மிக முக்கிய பங்காற்றுகிறது. அதில் தலைமை நீதிபதி பங்கு இந்தியாவின் இறையாண்மைக்கு அடித்தளமாக செயல்படுகிறது. இந்த நிலையில் 52வது உச்த நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள பி.ஆர்.கவாய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.