Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தாங்க 500 ரூபாய்.. டீ சாப்பிட்டு என்னை பாஸ் பண்ணி விடுங்க.. மாணவர்கள் கதறல்!

Karnataka SSLC Exam: கர்நாடகா SSLC தேர்வில், சில மாணவர்கள் தேர்ச்சி பெற லஞ்சம் மற்றும் காதல் கடிதங்கள் வரை resort செய்தனர். 500 ரூபாய் வைத்து "பாஸ் பண்ணுங்க சார்" என கேட்ட சம்பவங்கள், மாணவர்களின் மன அழுத்தத்தையும் தவறான எண்ணத்தையும் காட்டுகிறது. வெற்றி பெற நேர்மையான பழக்கமே வழி என்பதை இச்சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தாங்க 500 ரூபாய்.. டீ சாப்பிட்டு என்னை பாஸ் பண்ணி விடுங்க.. மாணவர்கள் கதறல்!
கர்நாடகா எஸ்.எஸ்.எல்.சி தேர்வு Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 20 Apr 2025 15:32 PM

கர்நாடகா ஏப்ரல் 20: கர்நாடகா (Karnataka) எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் (SSLC Exams) , சில மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாள்களில் ரூ.500 லஞ்சம் வைத்தும், உருக்கமான காதல் கடிதங்களையும் எழுதியும் கெஞ்சியுள்ளனர். “நான் தேர்ச்சி பெற்றால்தான் என் காதலைத் தொடர முடியும்”, “இந்த 500 ரூபாய்க்கு டீ குடிங்க சார்” போன்ற காட்சிகள் வினோதமாக உள்ளன. மற்றொருவர், “நீங்கள் பாஸ் பண்ணவில்லையென்றால் என் பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள்” என எழுதியுள்ளார். ஆசிரியர்கள் இது மாணவர்களின் மன அழுத்தத்தையும், தவறான எண்ணத்தையும் காட்டுகிறது என கூறுகின்றனர். வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேர்வில் வெற்றிக்கான பாதை நேர்மையான நடக்கும் பழக்கமே என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கையாளப்பட்ட வினோதமான முயற்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், தேர்வு விடைத்தாள்களை திருத்திக்கொண்டிருந்த ஆசிரியர்கள் சில விநோதங்களை கவனித்துள்ளனர். அதன்படி, சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்தும், பாசமான உருக்கமான கடிதங்களையும் எழுதியும், தேர்ச்சி பெற வேண்டுமென கெஞ்சியுள்ளனர்.

பணம் மற்றும் அன்புக் கடிதங்கள்!

சிலர் நேரடியாக லஞ்சம் கொடுப்பது போல, “இந்த 500 ரூபாய்க்கு டீ சாப்பிட்டுட்டு என்னை பாஸ் பண்ணுங்க சார்” என்று எழுதியிருந்தனர். இன்னொருவர், “நான் தேர்ச்சி பெற்றால்தான் என் காதலைத் தொடர முடியும்” என தன் காதலைக் கூட தேர்வுடன் தொடர்புபடுத்தியிருந்தார். “நீங்க பாஸ் பண்ணா, நானும் உங்களுக்கு இன்னும் பணம் கொடுப்பேன்” என பதிலுக்கு வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியும், மன அழுத்தமும்

மற்றொரு மாணவர், “நீங்க என்னை பாஸ் பண்ணலைன்னா என் அப்பா அம்மா என்னை காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்க” என எழுதி, குடும்ப சூழ்நிலையை மையமாகக் கொண்டுள்ளார். சில மாணவர்கள், “எங்களுடைய எதிர்காலமே இந்த தேர்வின் முடிவை பொறுத்தது” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் அதிர்ச்சி

இந்த வகை பதில்களை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வை ஒரு உணர்ச்சி விஷயமாக மாற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளனர். இது மாணவர்களின் மன அழுத்தத்தை வெளிக்காட்டுகிறது என்றும், தவறான வழியில் வெற்றியைத் தேடுகிற மனநிலையை பிரதிபலிக்கிறது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்வு என்பது ஓர் அத்தியாயம் மட்டுமே..

மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விருப்பம் இயல்பானது தான். ஆனால் அதற்காக எதையும் செய்யும் நிலையில் கொண்டு செல்லக்கூடாது என்பது முக்கியம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நேர்மையான முயற்சியின் மூலம்தான் வெற்றி எளிதாகும் என்பதையும் இந்த நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது பெரிதாகவே உருவாகியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...