12 ஆம் வகுப்பு மாணவனை 3வதாக காதலித்து திருமணம் செய்த 30 வயது பெண்!
30 Years Woman Married 18 Years Old Boy | உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிவானி என்ற பெண், ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து அவை விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது பள்ளி மாணவனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
உத்தர பிரதேசம், ஏப்ரல் 11 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) இரண்டு முறை திருமணம் செய்த பெண் மூன்றாவது முறை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால், இந்த முறை அவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 30 வயதாகும் இந்த பெண், வெறும் 18 வயதே ஆகும் பள்ளி மாணவனை திருமணம் செய்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு முறை திருமணமான அந்த பெண் பள்ளி மாணவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளி மாணவனை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோ மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயதான சபானா என்ற பெண். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். தனது காதலுக்காக சபானா இஸ்லாமியத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ள உண்மைகள்
30 வயது பெண் 18 வயது சிறுவனை திருமணம் செய்தது குறித்த தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சபானா குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். தற்போது தனது பெயரை ஷிவானி என மாற்றிக்கொண்ட சபானா ஆதரவற்ற பெண் என்பதும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
விவாகரத்தில் முடிந்த ஷிவானியின் முதல் இரண்டு திருமணங்கள்
ஷிவானி முதலாவதாக மீரட் பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால், அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துள்ளார். 2011 ஆம் அவரது இரண்டாவது கணவர் விபத்தில் ஊனமான நிலையில் ஷிவானிக்கு இந்த 12 ஆம் வகுப்பு மாணவன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்த ஷிவானி, தற்போது இந்த 12 ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு எதிராக எழும் கடும் எதிர்ப்புகள்
ஷிவானி 12 ஆம் வகுப்பு மாணவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த பெண் பள்ளி மாணவனை திருமணம் செய்தது சட்டபப்டி குற்றம் என்றும் அந்த பெண் மீது சடட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.