மாறிய மணப்பெண்.. மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உத்தர பிரதேசதில் வினோத சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் 20 வயது பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் தாயாரை இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த இளைஞர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

மாதிரிப்படம்
உத்தர பிரதேசம், ஏப்ரல் 20: உத்தர பிரசேதத்தில் மீண்டும் ஒரு வினோதமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, மணமகளுக்கு பதிலாக அவரது தாயுடன் இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்ய வைக்கப்பட இருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னை ஏமாற்றிய திருமணம் செய்து வைக்கப்பட இருந்ததாக கூறி, அந்த இளைஞர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். உத்தர பிரசேதச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிம் (22). இவருக்கு ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணுக்கு திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
மாறிய மணப்பெண்
இவர்கள் கடந்த வாரம் திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு ஏற்பாடுகள் இருவீட்டாரும் தீவிரமாக செய்தனர். இந்த நிலையில் திருமணத்தன்று ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. அதாவது, திருமணத்தின்போது மணமேடையில் மணமகன் அமர்ந்திருந்தார்.
அவரது பக்கத்தில் மணப்பெண்ணும் அமர்ந்திருந்தார். அப்போது, மணப்பெண்ணின் பெயர் தவறாக அறிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஆசிம், அந்த பெண்ணின் முகத்தில் போடப்பட்டிருந்த துணியை எடுத்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
அதாவது, ஆசிம் பக்கத்தில் மணப்பெண்ணாக 45 வயது அந்த பெண்ணின் தாயார் அமர்ந்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிம், திருமணத்தை நிறுத்த கூறி கூச்சலிட்டார். ஆனால், ஆசிமின் அண்ணன் மற்றும் அண்ணியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளனர். இருப்பினும், அங்ருந்து ஆசிம் தப்பிச் சென்றார்.
மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இதனை அடுத்து, ஆசிம் தனியாக வீட்டிற்கு சென்றார். இதனை அடுத்து, மீரட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து இருவீட்டாரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ரூ. 5 லட்சம் பணத்திற்கான விதவை பெண்ணை திருமணம் செய்ய ஆசிம் அண்ணன், மகமகளின் வீட்டாரிடம் பெற்றிருக்கிறார்.
இதனால், ஆசிப்க்கு 45 வயதான விதவை பெண்ணுடம் திருமணம் நடக்க இருந்தது என்று தெரியவந்தது. ஆசிம் போலீசாரிடம் கூறுகையில், “நான் முகத்தில் இருந்த துணியை எடுக்கும்போது அது மணமகள் மந்தாஷா அல்ல. அவரது தாய் தஹிரா என்பதை கண்டேன். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது” என்றார்.
மீரட் எஸ்எஸ்பி டாக்டர் விபின் தடா கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக ஒரு புகார் பெறப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு உண்மைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
அண்மையில், உத்தர பிரதேசத்தில் 43 வயது பெண், தன் மகளுடைய மாமனாருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கும், அவரது சம்மந்திக்கும் உறவு இருந்து வந்த நிலையில், நகை, பணத்துடன் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.