நமது உணவுப் பழக்கங்கள் தான் நம் உடல்நலனை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. நேரமில்லாமை, விருப்ப உணவுகள், தேவையற்ற ஸ்நாக்ஸ், இனிப்பு உணவுகள் உள்ளிட்டவை நம்மை அதிகம் பாதிக்கின்றன. குறிப்பாக தவறான உணவுப் பழக்கத்தினால் நீரிழிவு நோய் (Diabetes), மலச்சிக்கல், மனச்சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, செரிமான குறைபாடுகள் போன்றவை பொதுவாக காணப்படும் பிரச்னைகள். இவற்றைத் தவிர்க்க, எளிய இயற்கை உணவுகளை உணவில் சேர்ப்பது மிகவும் அவசியம். அத்தகைய உணவுகளில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. தினமும் ஒரு பேரீச்சம்பழம் (Dates) சாப்பிடுவது, உடலுக்கு தேவையான சத்துக்களைத் தருவதோடு, பலவிதமான நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது.
பேரீச்சம்பழம் வழங்கும் முக்கிய நன்மைகள்:
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல்
பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, உடலில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
மனநல மேம்பாடு
இதில் உள்ள இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையை பாசிடிவாக மாற்றுகின்றன. மேலும் நினைவாற்றலை அதிகரித்து, கவனச் சிதறல் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.
மலச்சிக்கலைத் தவிர்ப்பு
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான பிரச்னைகளை சரி செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்.
மனச்சோர்வை குறைக்கும்
பேரீச்சம்பழத்தில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் மனச்சோர்வை குறைத்து, சுறுசுறுப்பான உணர்வைத் தூண்டுகின்றன.
எலும்பு ஆரோக்கியம்
கால்சியம், மேக்னீசியம், காப்பர் போன்றவை பேரீச்சம்பழத்தில் உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்தும்.
இரத்தச் சோகை தடுப்பு
இரும்புச் சத்து கொண்டது என்பதால், பேரீச்சம்பழம் இரத்தச் சோகையை (அனீமியா) தடுப்பதில் உதவியாக இருக்கும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கான உணவு
பேரீச்சம்பழத்தில் உள்ள ஃபைபர், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். இதனால் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாகும்.
சரியான உணவு பழக்கங்களை உருவாக்கி, எளிய இயற்கை உணவுகளை உடலில் சேர்ப்பது, நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் பலவிதமான நோய்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, பேரீச்சம்பழத்தை தினசரி உணவில் சேர்ப்பது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, செரிமானத்தை சீராக்கி, மனநலத்தை மேம்படுத்துவதில் பெரும் உதவியாக இருக்கிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு உணவு வகையும் உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அதனை சரியாக புரிந்துகொண்டு தினசரி உணவில் இந்த பொருட்களை சேர்த்து, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி செய்வோம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)