Summer Safety Tips: தொடர்ந்து அதிகரிக்கும் வெப்ப நிலை.. சிறியவர்கள், முதியவர்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ்!
Extreme Heat Precautions: வெப்ப அலையின்போது பாதுகாப்பாக இருக்க, நீரேற்றத்த தவிர்த்தல், அதிக வெயிலின்போது வீட்டிற்குள் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. அந்தவகையில், கோடை காலத்தில் முதியவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் கொடூரமாக மாற தொடங்கிவிட்டது. வெப்ப அலைகள் (Heatwave) கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் கவனமுடன் இருப்பது முக்கியம். அதீத வெப்பநிலை காரணமாக இது போன்ற திறன் குறைவாக உள்ளவர்களுக்கு நீரிழப்பு, வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் (Heatstroke) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்ப அலையின்போது பாதுகாப்பாக இருக்க, நீரேற்றத்தை தவிர்த்தல், அதிக வெயிலின்போது வீட்டிற்குள் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. அந்தவகையில், கோடை காலத்தில் முதியவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
சிறியவர்களுக்கான குறிப்புகள்:
நீர்ச்சத்து:
கோடைக்காலத்தில் நாள் முழுவதும் சிறியவர்கள் நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். சிறியவர்களுக்கு அடர் நிற சிறுநீர் மற்றும் சோர்வு போன்றவை உங்கள் பிள்ளைகளுக்கு தோன்றினால், ஆரோக்கியமான பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றை குடிக்க கட்டாயப்படுத்துங்கள்.
சூரிய ஒளி:
உச்ச வெப்ப நேரங்கள் அதாவது காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நம் வீட்டு பிள்ளைகளை வீட்டிற்குள் இருக்க கட்டாயப்படுத்துங்கள். வெளியே செல்ல கட்டாயம் ஏற்பட்டால், தலை பாகை, குடை போன்றவற்றை கொடுத்து அனுப்புங்கள்.
லேசான ஆடை மற்றும் சன்ஸ்கிரீன்:
பருத்தி போன்ற காற்று உள்ளே செல்லக்கூடிய தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிய கோடைக்காலத்தில் பிள்ளைகளுக்கு பழக்கிவிடுங்கள். மேலும், பிள்ளைகள் வெளியே சொல்லும்போது தோல் பாதிக்காமல் இருக்க சன்ஸ்கிரீனை தேய்க்க சொல்லுங்கள்.
கவனித்தல்:
தோல் சிவத்தல், தலைச்சுற்றல், தலைவலி போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளை பிள்ளைகளிடம் ஏற்படுக்கிறதா என்பதை கவனியுங்கள். பாதிப்புகள் மோசமாக இருந்தால் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
குளியல்:
கோடைகாலத்தில் பிள்ளைகள் படுக்கைக்கு செல்வதற்கு முன் குளிர்ந்த குளிக்க சொல்லுங்கள். இது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும், நன்றான தூக்கத்தை மேம்படுத்தவும் உதவி செய்யும்.
முதியோருக்கான குறிப்புகள்:
வீட்டிற்குள் இருக்க சொல்லுங்கள்:
உச்சக்கட்ட வெப்பத்தின்போது வயதானவர்கல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டு. தேவைப்பட்டால், நிழலில் நடக்கவும், தலை பாகை மற்றும் சன்கிளாஸ்கர் போன்ற பாதுகாப்பு விஷயங்களை கொண்டு வெளியே சொல்லுங்கள்.
நீர்ச்சத்து பேணுங்கள்:
தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும். அதேநேரத்தில், மது மற்றும் காஃபின் போன்றவற்றை வெயில் காலத்தில் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை நீரிழப்பை ஏற்படுத்தும்.
மருந்துகளில் கவனம்:
சில மருந்துகள் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கலாம். வெப்ப அலையின்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து மருத்துவரை அணுகவும்.
உழைப்பை தவிர்க்கவும்:
வெயில் காலத்தில் முதியவர்கல் அதிக உழைப்பு மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிகமாக வேலை செய்யும்போது, அதிக வெப்பத்திற்கு வழிவகுத்து தலைசுற்றல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம்.