கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் – பாதுகாப்பது எப்படி?
Summer Health Alert: கோடைகாலத்தில் அதிக வெப்பம் காரணமாக பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் சில முக்கியமான உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். இந்த கட்டுரையில் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் 3 முக்கிய நோய்களையும் அவை ஏற்படாதவாறு தற்காத்துக்கொள்வது எப்படி என்பதையும் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கோடை காலத்தில் (Summer) உடல்நலன் குறித்து கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். வெப்பம் அதிகரிப்பதால் பல வகையான நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. நீர் குறைவினால் உடலுக்கு கடும் பாதிப்பு ஏற்படலாம். இந்த பருவம் பொதுவாக குழந்தைகள் (Children) முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்காது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பருவம் அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெரியவர்களின் உடல் அனைத்து பருவத்துக்கும் ஏற்றபடி சற்று மாற்றமடைந்திருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு கூட இந்த கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும். இந்த நிலையில் இந்த கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு மூன்று முக்கியமான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அவை எந்தெந்த நோய்கள் மற்றும் அவற்றை எப்படித் தவிர்க்க முடியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. டயரியா
குழந்தைகளுக்கு இந்த பருவத்தில் உடலில் நீர் குறைவினால் ஏற்படும் முக்கியமான நோய்களில் ஒன்று டயரியா ஆகும். அதிக வெப்பத்தினால் உணவு மற்றும் நீராகாரங்களில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும். அப்படி நோய் தொற்றுள்ள உணவுகள் குழந்தைகளின் குடலுக்குள் சென்று டயரியா ஏற்படுத்துகின்றன. டயரியாவின் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் அதிக வியர்வை ஏற்படக்கூடும். டயரியாவை குணப்படுத்தும் முறையாக மருத்துவர்கள் குழந்தைகளுக்கு போதுமான நீர் மற்றும் எலக்ட்ரோலைட்களை பரிந்துரைக்கின்றனர்.
2. ஹீட் ஸ்ட்ரோக்
கோடை காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக்கின் அபாயம் அதிகரிக்கும். ஏனென்றால் குழந்தைகளின் உடலால் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. குழந்தைகள் அதிக நேரம் நேரடியாக சூரிய ஒளியை எதிர்கொள்வது உடலின் வெப்பம் அதிகரிக்கின்றது. இதனால் குழந்தைகளை பள்ளியில் இருந்து வரும்போது சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும்போது குழந்தைகளின் தலையை பாதுகாப்பாக கவர் செய்ய வேண்டும். குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும்போது குடைகள் பயன்படுத்துவது நல்லது. குழந்தைகள் அடிக்கடி நீர் பருக வேண்டும் என அவர்களை அறிவுறுத்த வேண்டும். கடுமையான வெப்பம், தலைவலி மற்றும் மயக்கம் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள். இதுகுறித்து அவர்களுக்கு அறிவுறுத்தி பாதுகாப்பாக இருக்க சொல்ல வேண்டும்.
3. டைபாய்டு
கோடைகாலத்தில் டைபாய்டு நோயின் அபாயம் அதிகரிக்கும். இந்த பருவத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மாசுபட்ட நீர் பாதிப்பை ஏற்படுத்தி டைபாய்டு நோயை உருவாக்குகிறது. காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்று வலி ஆகியவை டைபாய்டு நோயின் அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால், குழந்தைகளை டைபாய்டு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
நோய்களிலிருந்து பாதுகாக்க எளிய வழிகள்:
-
குழந்தைகளுக்கு சுத்தமான வாழ்க்கை முறைகளை கற்பிக்க வேண்டும், அடிக்கடி கை கால்கள் கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
-
குழந்தைகளுக்கு போதுமான அளவில் நீர் பருக விடுங்கள்.
-
சுத்தமான உணவுகளை மட்டும் கொடுங்கள், சாலையோரங்களில் விற்கப்படும் உணவுகள் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
-
அவர்களை நேரடியாக வெப்பம் மற்றும் சூரிய ஒளி படாமல் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)