Moringa Health Benefits: ஆரோக்கியத்தின் புதையலாய் முருங்கை இலை.. இந்த 7 அதிசய நன்மைகளை தரும்!
Moringa Leaves Nutritional Value: முருங்கை இலைகள் பல சிறந்த நன்மைகளை வழங்குகின்றன. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையை சரி செய்யவும் உதவுகிறது. சர்க்கரை நோய், வீக்கம், வயிற்று வலி மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவும். எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முருங்கையின் மருத்துவ குணங்களை அறியுங்கள்.

முருங்கை இலையின் நன்மைகள்
பெரும்பாலான மக்கள் முருங்கை மரத்தின் பயன்களை பற்றி அறிந்திருக்கவில்லை. இதன் நன்மைகளை பற்றி மிக சிலருக்கே தெரியும். முருங்கைக்காய் பல பெரிய நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. முருங்கைக்காய் முருங்கை என்றும் அழைக்கப்படுகிறது. முருங்கையுடன் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் அதாவது பூக்கள், இலைகள் உட்பட அனைத்தும் நன்மைகள் தரும். முருங்கை இலைகள் (Moringa Leaf) பெரும்பாலும் தென்னிந்திய சமையலறைகளில் (South Indian Kitchen) காணப்படுகின்றன. ஆயுர்வேதத்தில், முருங்கை இலைகள் ஒரு பயனுள்ள மருந்தாகக் கருதப்படுகின்றன. இந்த பச்சை இலைகள் ஊட்டச்சத்துக்களின் ஒரு புதையல் என்றே சொல்லலாம். அந்தவகையில், முருங்கை இலைகள் எடுத்துகொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இதயத்திற்கு சிறந்தது:
முருங்கை இலைகளின் காணப்படும் பாலிபினால்கள் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். அதேபோல், இதய தமனிகளை ஆரோக்கியமான வைத்திருக்க உதவுகின்றன. இதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
முருங்கை இலைகளில் வைட்டமின் சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்புகள் அதிகமாக உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக, தொற்றுநோய்களை எதிர்த்து போராட தேவையான வலிமையை அதிகரிக்கும்.
இரத்த சோகையை நீக்கும்:
முருங்கை இலைகள் இரும்பு சத்தின் ஆதாரமாக உள்ளது. இது ஹீமோகுளோபினை அதிகரித்து, இரத்த சோகையை நீக்குகிறது. இது உடலில் ஆற்றலை பராமரிக்கவும், சோர்வை நீக்கவும் உதவுகிறது.
சர்க்கரை நோய்:
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை இலைகள் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. முருங்கை இலைகளில் உள்ள குளோரோபில் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த இலைகள் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து சர்க்கரையை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
வீக்கம் மற்றும் வயிற்று வலி:
முருங்கை இலைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று வலி மற்றும் புண்கள் போன்ற நோய்களைக் குணப்படுத்துகிறது. மேலும், மூட்டு வீக்கம் மற்றும் தசை வலியைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.
முடி உதிர்வு:
முருங்கை இலைகள் முடி வளர்ச்சிக்கு டானிக் என்றே சொல்லலாம். முருங்கை இலையில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இணைந்து கெரட்டின் உருவாகின்றன. இது முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். முருங்கைக்காயின் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளில் பெறப்படும் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு சிறந்தவை. இந்த எண்ணெய் முடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகிறது மற்றும் பொடுகு மற்றும் முடி உதிர்தலைத் தடுக்கிறது.
எலும்பு வலு:
முருங்கை இலைகளின் கஷாயம் குடிப்பதன் மூலமும் எலும்புகள் வலுவடையும். இந்த இலைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காணப்படுவதால், இது ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)