Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆய்வில் அதிர்ச்சி: கருப்பை முட்டைக்குள் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிப்பு

Microplastics Found in Female Reproductive Fluid: முதல் முறையாக பெண்களின் கருப்பை முட்டை திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இனப்பெருக்கத் திறன் மற்றும் ஹார்மோன் சீராக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவுகளின் மூலம் உடலுக்குள் நுழையும் இந்த துகள்கள் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல நச்சுப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

ஆய்வில் அதிர்ச்சி: கருப்பை முட்டைக்குள் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிப்பு
மைக்ரோபிளாஸ்டிக்குகள் Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 20 Apr 2025 10:17 AM

முதல் முறையாக பெண்களின் கருப்பை முட்டை திரவத்தில் (Female Ovarian Egg) மைக்ரோபிளாஸ்டிக்குகள் (Microplastics) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்களின் இனப்பெருக்க திறன் மற்றும் ஹார்மோன் சீராக்கள் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இத்தாலியில் 18 பெண்களில் 14 பேரின் கருப்பை திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவுகள் மூலமாக மனித உடலுக்குள் நுழையும் இந்த துகள்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு காரணமாகலாம். மனித சிறுநீர், விந்துவிலும் இது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர் லூயிஜி மொன்டானோ (Researcher Luigi Montano) தெரிவித்துள்ளார். மிக நச்சுத்தன்மையுள்ள வேதியல்களை உடலுக்குள் கொண்டு செல்லும் “ட்ரோஜன் ஹார்ஸ்” எனவும் அவர் எச்சரிக்கிறார்.

கருப்பை முட்டை உற்பத்திக்குப் பயன்படும் திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்குகள்

முதல் முறையாக மனித உடலில், குறிப்பாக மகளிரின் கருப்பை முட்டை உற்பத்திக்குப் பயன்படும் திரவத்தில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் பெண்களின் இனப்பெருக்க திறனைப் பாதிக்கக் கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

14 பெண்களின் கருப்பை திரவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருந்தது உறுதி

இந்த கண்டுபிடிப்பு Ecotoxicology and Environmental Safety என்ற பத்திரிகையில் வெளியானது. இது இத்தாலியின் சாலெர்னோவில் உள்ள ஒரு வளர்சிதைவு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்ற 18 பெண்களின் கருப்பை முட்டை திரவங்களை ஆய்வு செய்ததில் ஏற்பட்டது. இதில் 14 பெண்களின் கருப்பை திரவங்களில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருந்தது உறுதியாகியுள்ளது. இந்த திரவம் முட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் உயிரணுக் குறியாக்கள் போன்ற முக்கிய கூறுகளை கொண்டிருக்கும்.

கவலையளிக்கக்கூடிய ஒன்று என ஆய்வாளர் டாக்டர் லூயிஜி மொன்டானோ கருத்து

ஆய்வாளர், ரோம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லூயிஜி மொன்டானோ, “இந்த கண்டுபிடிப்பு பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் நுழையும் இந்த நவீன மாசுபாட்டுச் சேர்க்கைகளின் ஆபத்துக்களை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறது,” எனக் கூறியுள்ளார். இது மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்று எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

உணவுகளே மனித உடலுக்குள் பிளாஸ்டிக்குகள் நுழைவதற்கான முக்கிய வழி

சமீப ஆண்டுகளில், எவரெஸ்ட் மலை உச்சியில் இருந்து மரியானா பள்ளத்தாக்கின் அடிவரை, மைக்ரோபிளாஸ்டிக்குகள் காணப்பட்டுள்ளன. உணவுகள், குறிப்பாக இறைச்சி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் இந்த துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் உணவுகளே மனித உடலுக்குள் மைக்ரோபிளாஸ்டிக்குகள் நுழைவதற்கான முக்கிய வழியென நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த துகள்கள் பிஃபெனோல், பித்தாலேட்கள், PFAS போன்ற 16,000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் வேதியியல் சேர்மங்களை உடன் எடுத்து செல்லும் திறனுடையவை. இவை பலவிதமான புற்றுநோய்கள், நரம்பியல் நச்சுத்தன்மை, ஹார்மோன் குழப்பங்கள், மற்றும் வளர்ச்சி குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியவை.

மனித சிறுநீர் மற்றும் விந்துவிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள்

மொன்டானோ நடத்திய பிற ஆய்வுகளில் மனித சிறுநீர் மற்றும் விந்துவிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவடையும் காரணங்களில் இதுவும் முக்கிய பங்கு வகிக்கலாம் என அவர் கூறுகிறார். குறிப்பாக மாசுபாடு அதிகமான பகுதிகளில் இந்த வீழ்ச்சி தெளிவாக தெரிகிறது.

ஆண்கள் மட்டும் இல்லாமல், பெண்களிலும் இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் இனப்பெருக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். விலங்குகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், முட்டை உருவாக்கம் குறைபாடுகள் மற்றும் கருப்பையில் சீர்கேடுகள் போன்றவை பதிவாகியுள்ளன.

நச்சான வேதியல்களை உடலுக்குள் நுழைய வைக்கும்

இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் ஒரு வகை “ட்ரோஜன் ஹார்ஸ்” போன்று செயல்பட்டு, நச்சான வேதியல்களை உடலுக்குள் நுழைய வைக்கும் என மொன்டானோ எச்சரிக்கிறார். இவை பெண்களின் ஹார்மோன் சீராக்கம் மற்றும் இனப்பெருக்கத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதென்றும், ஆனால் இந்த நச்சுத்தன்மைகள் எந்த அளவிலிருந்து விளைவாகின்றன என்பதை அறிய மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றும் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஜியாவோஷொங் யூ கூறியுள்ளார்.

தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...