Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mangoes in Summer: கோடையில் மாம்பழத்தை அதிகமாக ருசிக்க ஆசையா..? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!

Safe Mango Consumption: கோடை காலத்தில் அதிகம் விரும்பப்படும் மாம்பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும், பாதுகாப்பான உட்கொள்ளுதல் குறிப்புகள் பற்றியும் இந்தக் கட்டுரை விளக்குகிறது. அதிகளவு மாம்பழம் உண்பதால் ஏற்படும் பிரச்சனைகள், ரசாயனம் கலந்த மாம்பழங்களைத் தவிர்ப்பது, தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் முக்கியத்துவம் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மாம்பழத்தின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

Mangoes in Summer: கோடையில் மாம்பழத்தை அதிகமாக ருசிக்க ஆசையா..? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
மாம்பழங்கள்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2025 15:56 PM

கோடைக்காலம் (Summer) வந்தாலே பல பிரச்சனைகளை கொண்டுவரும். அதிகாலை முதலே மக்கள் கடும் வெயிலால் அவதிப்பட தொடங்குகிறார்கள். இந்த கடும் வெப்பத்தின் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கிறார்கள். கோடைக்காலத்தில் இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் மேலாக ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் மாம்பழம்தான். இனிப்பும், புளிப்பு சுவையை கொண்ட இந்த பழத்தின் பெயரை கேட்டாளே மக்களின் வாயில் எச்சில் ஊற தொடங்கும். இதன் சுவையை தவிர, மாம்பழம் (Mango) சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அந்தவகையில்,அதிகபடியான மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

மாம்பழத்தில் அதிகளவிலான நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. மாம்பழம் சாப்பிடுவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். இருப்பினும், மாம்பழம் சாப்பிடுவதற்கு முன் சில விஷயங்களை மனதில் கவனம் கொள்வது முக்கியம். அதாவது, ஒரே நேரத்தில் அதிக அளவிலான மாம்பழம் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது. மேலும், சில பொருட்களுடன் மாம்பழத்தை சாப்பிடுவதும் நல்லதல்ல. மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு சிறுது நேரம் சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்..?

மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், மாம்பழத்தில் ஆண்டி – நியூட்ரியண்ட் என்று அழைக்கப்படும் பைடிக் அமிலம் என்ற இயற்கை மூலக்கூறு உள்ளது. அதாவது, மாம்பழம் சாப்பிடுவதால் நம் உடல் பெறும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை பைடிக் அமிலம் தடுக்கிறது. குறிப்பாக, பைடிக் அமிலம், இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களை உறிஞ்சும் உடலின் திறனில் தலையிடுகிறது. இப்படியான சூழ்நிலையில், மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊறவைப்பது முக்கியம்.

மாம்பழம் இனிப்பு மற்றும் குளிர்ச்சியான பண்புகளுக்காக அறியப்படுகிறது. இது உடல் வெப்பத்தை சமப்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், இதை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இந்த குணங்களை மேம்படுத்தலாம். மாம்பழங்களை ஊறவைப்பது அவற்றில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கும். அவை அதிக நீரேற்றத்தை அளிக்கும். மேலும், அவற்றின் சுவையையும் மேம்படுத்தும். மேலும், இது செரிமானத்திற்கும் உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

மாம்பழம் வைட்டமின் சி இன் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

நினைவாற்றல்:

மாம்பழத்தில் காணப்படும் குளுட்டமைன் அமிலம் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்த உதவும். உங்களுக்கு நினைவாற்றல் குறைவாக இருந்தால், உங்கள் உணவில் மாம்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய்:

மாம்பழத்தில் அந்தோசயனிடின்கள் எனப்படும் டானின்கள் உள்ளன.அவை சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்க உதவும்.

கண்கள்:

மாம்பழத்தில் வைட்டமின் ஏ காணப்படுகிறது. வைட்டமின் ஏ கண்களுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. கண்பார்வையை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மாம்பழத்தை உட்கொள்ளலாம்.

சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!
தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் சதம்! வேலை காட்டும் வெயில்..!...
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!
பட்ஜெட் விலையில் பவர் ஹவுஸ்: ரெட்மி டர்போ 4 ப்ரோவின் சிறப்பம்சம்!...