தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?

HIV Crisis Explained: தமிழ்நாட்டில் கடந்த 6 மாதத்தில் 25,000 பேர் புதிதாக எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் திடீர் உயர்வுக்கு காரணம் என்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழகத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

21 Apr 2025 15:13 PM

தமிழ்நாடு (Tamil Nadu) சட்டசபையில் கடந்த ஏப்ரல் 15,2025 அன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் (Ma. Subramanian) பேசும்போது , தமிழ்நாட்டில் எச்ஐவி (HIV) தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1, 57,908 உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் கடந்த 6 மாதத்தில் 25,000 பேர் புதிதாக எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். தற்போது அவர்களில் 1, 41, 341 பேருக்கு 71 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 18 வயதுகுட்பட்ட 7618 குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்காக ரூ. 1.81 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அவரது பேச்சு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு முறையற்ற உறவு ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மேலும் பல வழிகளிலும் எச்ஐவி தொற்று பரவி வருகிறது. குழந்தைகள் பலரும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எச்.ஐ.வி பரிசோதனை செய்யாத, பாதுகாப்பற்ற ரத்தம் கொடுக்கப்படுவது குழந்தைக்கு தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஊசிகளை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதான ஊசிகளை பயன்படுத்த வேண்டும். எச்ஐவி பாதிப்புள்ள ஒருவருக்கு போடப்படும் ஊசிகள், தவறுதலாக வேறு ஒருவருக்கு போடப்படும்போது அவருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

அதிகரிக்கும் எச்ஐவி நோய் தொற்றுக்கு காரணம்

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறப்படும் ரத்தம் சோதனை செய்யப்படாமல் வேறு நபருக்கு செலுத்தும்போது அதன் மூலம் எச்ஐவி நோய் தொற்று பரவக்கூடும். கடந்த 2018 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் தவறுதலாக கொடுக்கப்பட்டு அதன் மூலம் அந்த பெண்ணுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை மருந்துகள் பயன்படுத்தும் சிலர், ஒரே ஊசியை பல நபர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். எச்ஐவி தொற்று உள்ளவர் பயன்படுத்திய ஊசியை மீண்டும் வேறொருவர் பயன்படுத்தினால் அவருக்கு பரவ வாய்ப்பு அதிகம். இது தற்போது சமூகத்தில் அதிகரித்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

டாட்டூ போடுபவர்கள் உஷார்!

டாட்டூ போடும்போது, தோலில் ஊசி மூலம் மை செலுத்தப்படுகிறது. ஒவ்வொருமுறையும் ஊசி செய்யப்படவில்லை என்றால், அதன்மூலம் எச்ஐவி வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுவாக அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் மட்டுமே டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும். சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் இதுபோன்ற டாட்டூக்களை போட்டுக்கொள்வது ஆபத்தில் முடியலாம். எனவே எச்சரிக்கையுன் இருக்க வேண்டும்.

அதே போல காது மற்றும் மூக்கு குத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதில் பயன்படுத்தப்படும் ஊசிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டிருக்கும். சில கிராம பகுதிகளில் அல்லது பொது இடங்களில் செய்யப்படும் piercing முறைகள் பாதுகாப்பில்லாதவையாக இருக்கலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)