ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை: நோயாளியின் சிறுநீரகங்களை காப்பாற்ற பயன்படுத்தப்பட்ட குடல் வால்

Rare Surgery Breakthrough: ஹைதராபாத்தில், மருத்துவர் குழுவொன்று ஒரு நபரின் சிறுநீரகங்களை காப்பாற்றும் வகையில், அவருடைய சொந்த குடல்வால் பயன்படுத்தி சிறுநீரக பாதையை மீட்டமைத்துள்ளனர். இயற்கையாகவே பயன்பாடின்றி கைவிடப்படும் அப்பெண்டிக்ஸ் உறுப்பை பயன்படுத்தி, இரு சிறுநீரகங்களும் செயல்பட உதவியது இந்த அறுவை சிகிச்சையின் சிறப்பு. இது மருத்துவ உலகில் அபூர்வமான முறையாகும்.

ஹைதராபாத் மருத்துவர்கள் சாதனை: நோயாளியின் சிறுநீரகங்களை காப்பாற்ற பயன்படுத்தப்பட்ட குடல் வால்

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Apr 2025 00:12 AM

மேற்கு வங்கத்தை (West Bengal) சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு வெவ்வேறு இடங்களில் சிறுநீரகக் கற்களை (Kidney Stones) அகற்றுவதற்கான வழக்கமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு, அவரது சிறுநீர்க்குழாய் முற்றிலுமாக அடைபட்டது. இதன் விளைவாக, கிரியேட்டினின் ஆபத்தான அளவிற்கு அதிகரித்து, கடுமையான வலி மற்றும் அடிக்கடி காய்ச்சலை ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுத்தது. அவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால்,  சிறுநீரை வெளியேற்ற தற்காலிகமாக குழாய்கள் (நெஃப்ரோஸ்டமிகள்) அவருக்கு பொறுத்தப்பட்டன. நாடு முழுவதும் பல மருத்துவமனைகளுக்கு பயணம் செய்தும், எந்த மருத்துவமனையிலும்(Hospital) அனுமதிக்கப்படாததால், அவர்கள் இறுதியாக ஹைதராபாத்தில் உள்ள ஏசியன் இஸ்ட்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது சிறுநீர் பாதையில் கடுமையான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவரது வலது சிறுநீரகத்தை மாற்ற, மருத்துவர்கள் முதலில் அவரது சொந்த குடல்வால் பகுதியை அகற்றி, அடைபட்ட சிறுநீர் குழாய்க்கு பதிலாக அதைப் பொருத்தினர். குடல்வால் சிறுநீர்க்குழாயின் அளவைப் போன்றது. இது ஒரு ரோபோடிக் அறுவை சிகிச்சையால் மாற்றப்பட்டது. இது மிகவும் அரிதான சிகிச்சையாகும்.

சிறுநீர் குழாய்களுக்கு பதிலாக குடல்வால்

இந்த சிகிச்சையானது கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுநீர்க் குழாயை சரிசெய்யும். இது வழக்கமாக செய்யப்படுவதில்லை. ஆனால் இந்த நோயாளியின் விஷயத்தில், இது சரியான தீர்வாகும்,” என்று ஏசியன் இஸ்ட்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி  மருத்துவமனையின்  ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரக மருத்துவர் டாக்டர் சையத் முகமது கௌஸ் கூறினார். இந்த சிகிச்சைக்குப் பிறகு, அவரது வலது சிறுநீரகம் குணமடைந்தது. அதன் மூலம், வெளிப்புறத்தில் இணைக்கப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டன.

இரண்டு மாதங்களுக்குப் பிறகும், அவரது இடது சிறுநீரகம் இன்னும் அப்படியே இருந்தது. குடல்வால் வலது பக்கத்தில் இருப்பதால், குடல்களை அகற்றி மறுபுறம் இணைக்க முடியும். ஆனால், இந்த முதியவருக்கு அதில் பிரச்னைகள் இருந்ததால், மருத்துவர்கள் அவரது சொந்த சிறுநீரகத்தை மாற்றுவது என்ற மிகவும் அரிதான தீர்வைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த சிக்கலான சிகிச்சையில், நோயாளியின் இடது சிறுநீரகம் இரத்த நாளங்களுடன் அகற்றப்பட்டது. பின்னர் அது  சற்று  கீழ் பகுதியில் இணைக்கப்பட்டது. இந்த வழியில், சேதமடைந்த சிறுநீர்க்குழாய் நீக்கப்பட்டு, ஆரோக்கியமான பகுதி வழியாக சிறுநீர் பாய அனுமதிக்கப்பட்டது.

மருத்துவர்களின் அசாத்தியமான முயற்சியால் குணமான முதியவர்

இதுகுறித்து  சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர் விஜய் மாதூரி கூறியதாவது, ஆட்டோலோகஸ் எனப்படும் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மிகப் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகின்றன. இது ஒரு கடைசி முயற்சி. இது மிகவும் துல்லியமான அறுவை சிகிச்சை என்றார். தற்போது முதியவர் நலமுடன் இருக்கிறார். சிறுநீரகங்கள் நன்றாக செயல்படுகின்றன. மேலும் கிரியேட்டினின் அளவும் இப்போது நார்மலாக இருக்கிறது. மேலும் வலி மற்றும் பிற பிரச்னைகள் குறைந்துவிட்டன.