வெயில் காலங்களில் வெளியே செல்கிறீர்களா? இந்த 7 டிப்ஸ்களை தெரிஞ்சுக்கோங்க!
Heatwave Travel Safety Tips: வெயில் காலங்களில் வெளியே பயணிப்பதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால் வேலை போன்ற காரணங்களால் வெளியே செல்வதை தவிர்க்க முடியாது. இந்த நிலையில் வெப்பமான நேரங்களில் வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முறைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழகத்தில் வெப்ப அலை (Heat Wave) கடுமையாக தாக்கிவருகிறது. குறிப்பாக பயணிக்கும் போது உடல்நலம் கவனிக்கப்படாவிட்டால் வெப்பத்தால் உடல் தளர்ச்சி, ஹீட் ஸ்டிரோக் (Heat Stroke) போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவை உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மாறக்கூடும். பொதுவாக வெயில் காலங்களில் மருத்துவர்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத அவசர நிலைகளின்போது வெயிலில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மேலும் ஒரு சிலருக்கு வேலை சார்ந்து வெயில் நேரங்களில் பயனித்தாக வேண்டிய சூழல் இருக்கும். அதனால் வெயிலில் பாதுகாப்பாக பயணிக்க இந்திய டுடே இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் கீழ்கண்ட எளிய ஆலோசனைகளை பின்பற்றி வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
பயணத்தின் போது வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க எளிய வழிகள்
- கோடைகாலத்தில் உடலில் அடிக்கடி நீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே அடிக்கடி நீர் பருகுவது நம்மை பாதுகாக்கும். இயயற்கை பானங்களான இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை வெளியில் செல்லும்போது கையோடு எடுத்து சென்று அவ்வப்போது பருகுவது நல்லது.
- வெளியில் செல்லும்போது வெப்பத்தை தவிர்க்க, வெள்ளை நிறம் போன்ற அடர்த்தி குறைவான நிறங்களை அணிவது நல்லது. கருப்பு போன்ற அடர்த்தி அதிகமான நிறங்கள் வெப்பத்தை ஈர்க்கும்.
- முடிந்த வரை காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை நேரடி சூரிய ஒளியில் பயணிப்பதைத் தவிர்க்கவும். அவசியம் ஏற்பட்டால் தொப்பி, சன் கிளாஸ், குடை போன்றவற்றை எடுத்து செல்லவும்.
- பயணங்களின் போது மயக்கம், அதிக வியர்வை, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே ஓய்வெடுத்து நிழலில் அமருங்கள். உடனடியாக நீர் அருந்தவது நல்லது.
- காய்கறிகள், பழங்கள், எளிதாக ஜீரணமாகும் உணவுகள் அதிகம் உட்கொள்ளுங்கள். குறிப்பாக பயணங்களின் போது அதிக எண்ணெய், காரமான உணவுகளை தவிர்க்கவும்.
- கடுமையான வெப்பத்தை கருத்தில் கொண்டு உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
- முடிந்த வரை பயணங்களின் போது வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை வெயிலின்போது அழைத்து செல்ல வேண்டாம். அவர்கள் வெப்பத்தால் எளிதாக பாதிக்கப்படக்கூடியவர்கள். எனவே தவிர்க்க முடியாத தருணங்களில் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது அவசியம்.
வெப்ப அலை என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியது அல்ல. சிறிய விழிப்புணர்வும் முன்னேற்பாடும் இருந்தால், வெப்பம் அதிகரித்த காலத்திலும் நீங்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். உங்கள் உடல்நலத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)