Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: தர்பூசணி விதைகளை தூக்கி போடாதீங்க.. எலும்பு பலம் முதல் சரும பாதுகாப்பு வரை.. சிறப்பான அருமருந்து!

Health Benefits of Watermelon Seeds: தர்பூசணி இதய ஆரோக்கியத்தையும் உயர் இரத்த அழுத்தத்தையும் மேம்படுத்துவது போல, எல்டிஎல் ஆக்ஸிஜனேற்றத்தை குறைத்து, பெருங்குடல் உட்பட சில வகையான புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. தர்பூசணி எப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறதோ, அதேபோல் அதன் கொட்டைகளும் உடலுக்கு பல நன்மைகளை தரும். அதன் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

Health Tips: தர்பூசணி விதைகளை தூக்கி போடாதீங்க.. எலும்பு பலம் முதல் சரும பாதுகாப்பு வரை.. சிறப்பான அருமருந்து!
தர்ப்பூசணி விதையின் நன்மைகள்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 09 Apr 2025 17:17 PM

கோடைக்காலத்தில் (Summer) மிக முக்கியமான ஆரோக்கிய உணவுகளில் தர்ப்பூசணி மிக முக்கியமானது. தர்ப்பூசணி வெயில் காலத்தில் உங்கள் உடலை குளிர்விக்க உதவி செய்யும். மேலும், கோடைக்காலத்தில் அதிகம் விரும்பப்படிம் இந்த பழம் உங்களை புற்றுநோயிலிருந்து (Cancer) பாதுகாக்கும். சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, லைகோபீன், பீட்டா கரோட்டின், வைட்டமின் பி6, ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை தரும். தர்பூசணி இதய ஆரோக்கியத்தையும் உயர் இரத்த அழுத்தத்தையும் மேம்படுத்துவது போல, எல்டிஎல் ஆக்ஸிஜனேற்றத்தை குறைத்து, பெருங்குடல் உட்பட சில வகையான புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. தர்பூசணி எப்படி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறதோ, அதேபோல் அதன் கொட்டைகளும் உடலுக்கு பல நன்மைகளை தரும். அதன் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

எலும்புகளை பலப்படுத்தும்:

தர்பூசணி விதைகளில் மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு 5-6 உலர்ந்த தர்பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.

விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும்:

கருவுறாமை பெண்களால் மட்டுமே ஏற்படுவதில்லை. இதற்கு ஆண் தான் காரணம். ஒரு ஆணுக்கு விந்தணு குறைபாடு இருக்கும்போது, ​​எதிர்காலத்தில் அவருக்கு குழந்தை பிறக்க முடியாமல் போகலாம். தர்பூசணியில் அதிக அளவு துத்தநாகம் உள்ளது. இதனால், இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படும்:

தர்பூசணி விதைகளில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, மேலும் சருமத்தை சுத்தப்படுத்த உதவுகின்றன. இது பல்வேறு அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தர்பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளது. அவை சருமத்திற்கு மாய்ஸ்சரைசராகச் செயல்படுகின்றன.

கூந்தலுக்கு நல்லது:

எல்லோரும் ஆரோக்கியமான கூந்தலை விரும்புகிறார்கள். தர்பூசணி விதைகளில் உள்ள புரதங்கள், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவை முடியின் தரத்தை மேம்படுத்துகின்றன. இது முடியையும் பலப்படுத்துகிறது. தர்பூசணி விதைகளில் உள்ள மாங்கனீசு முடி உதிர்தலைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்களை எதிர்த்துப் போராட முடியும். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது, ​​மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போராடினர். தர்பூசணி விதைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மூலப்பொருள் உள்ளது. எனவே தர்பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.

தர்பூசணி விதைகளை எப்படி சாப்பிடுவது?

நீங்கள் தர்பூசணி விதைகளை உலர்த்தி பொடியாக செய்து சாப்பிடலாம். இதை ஒரு பாத்திரத்தில் வறுத்து ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் ரொம்ப ருசியா இருக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு......
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்...
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?...
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......