வெப்பத்தின் தாக்கத்தினால் வயிற்று பிரச்னை? சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள்
Healthy Summer Eating Tips : கோடைகாலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக பெரும்பாலானோருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பில் இருந்து விடுபட கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள் என்ன ? இதனை தவிர்ப்பது எப்படி ? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சமீபகாலமாக வெப்ப அலை (Heat Wave) காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட அதிகமாக காணப்படுகின்றன. வெயில் காலங்களில் அதிக காரசாரமான உணவுகள், அதிகமாக சிக்கன்(Chicken) போன்ற நான் வெஜ் உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், புகைபிடித்தல், அதிகமாக காபி (Coffee), டீ குடிப்பது, உணவு சாப்பிட்டு உடனே அமர்ந்து விடுவது, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்றவை வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக அல்சர், தலைவலி, பசி எடுக்காமல் இருப்பது, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். வெயிலின் தாக்கம் அதிகமாகும் கோடைக்காலத்தில், வயிற்றில் உண்டாகும் வெப்பம் மற்றும் எரிச்சலை குறைக்கும் இயற்கையான உணவுகளை உணவில் சேர்ப்பது அவசியம். இவை உடலை குளிர்விக்கவும், ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
வயிறு பிரச்னைகளைக் குறைக்கும் சிறந்த உணவுகள்
வெள்ளரிக்காய் (Cucumber)
வெள்ளரிக்காய் 95 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டுள்ளது. இது உடலை குளிர்விக்கவும், ஜீரண மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தினசரி உணவில் சாலட் அல்லது சாறு வடிவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இளநீர் (Coconut Water)
இளநீர் இயற்கையான குளிர்பானமாகும். இது உடலை ஹைட்ரேட் செய்யும் மற்றும் ஜீரணத்தை மேம்படுத்தும். தினசரி ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீர் குடிப்பதனால் வயிற்றை பிரச்னையின்றி நிம்மதியாக வைத்திருக்க உதவும்.
மோர் (Buttermilk)
மோர் ஜீரணத்திற்கு மிகவும் பயனுள்ளது. இது உடலை குளிர்விக்கவும், அமிலத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது. மோரில் சிறிது உப்பு மற்றும் சீரகம் சேர்த்து குடிப்பது சிறந்தது.
தர்பூசணி மற்றும் முலாம் பழம் (Watermelon and Muskmelon)
இவை அதிக அளவு தண்ணீரைக் கொண்ட பழங்கள். இவை உடலை ஹைட்ரேட் செய்யும் மற்றும் ஜீரணத்தை மேம்படுத்தும். தினசரி ஒரு கிண்ணம் தர்பூசணி அல்லது முஸ்க் மெலன் சாப்பிடுவது உடலை குளிர்விக்க உதவும்.
சோம்பு தண்ணீர் (Fennel Water)
சோம்பு ஜீரணத்தை மேம்படுத்தும் மற்றும் உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது. ஒரு மேசைக்கரண்டி சோம்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலை காலையில் வடிகட்டி குடிப்பது வயிற்று எரிச்சலை குறைக்கும்.
துளசி விதைகள் (Basil Seeds)
துளசி விதைகள் உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டவை. இவற்றை நீரில் ஊறவைத்து, சர்பத் அல்லது பாலில் சேர்த்து குடிப்பது உடலை குளிர்விக்க உதவும்.
வெயிலுக்காலத்தில் உடல்நலம் பாதிக்காமல் இருக்க, உணவில் சரியான மாற்றங்களை செய்வது அவசியம். உடலுக்கு குளிர்ச்சியை தரும் உணவுகள், பசியை தூண்டுவதுடன், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)