Health Tips: முட்டை வெள்ளைக்கருவில் கொட்டிக்கிடக்கும் ஊட்டச்சத்துகள்.. ஆரோக்கிய நன்மைகள் இவ்வளவா..?
Egg White Benefits: முட்டை வெள்ளை புரதம் என்பது ஒரு முட்டையின் தெளிவான திரவ பகுதியிலிருந்து (அல்புமின்) என்ற உயர்தர, முழுமையான புரத மூலமாகும். முழு முட்டைகளை போல் இல்லாமல், முட்டை வெள்ளைக்கரு கொழுப்பு இல்லாமல், ஒரு மெலிந்த மற்றும் நல்ல தரமான புரத மூலத்தை கொண்டுள்ளது.

முட்டை (EGG) என்பது ஒரு ஆரோக்கியமான மற்றும் உயர்தர புரத உணவாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இது அறிவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கவும் உதவும். இருப்பினும், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கரு (Egg Whites) என இரண்டு பகுதிகள் எப்படி தனித்தனியே உள்ளதோ, இந்த இரண்டிலும் ஊட்டச்சத்துகள் தனித்தனியே உள்ளன. எனவே, நீங்கள் முழு முட்டையையும் உட்கொள்கிறீர்கள் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவின் ஊட்டச்சத்து விவரம் உள்ளிட்ட என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
முட்டை வெள்ளை புரதம் என்றால் என்ன..?
முட்டை வெள்ளை புரதம் என்பது ஒரு முட்டையின் தெளிவான திரவ பகுதியிலிருந்து (அல்புமின்) என்ற உயர்தர, முழுமையான புரத மூலமாகும். முழு முட்டைகளை போல் இல்லாமல், முட்டை வெள்ளைக்கரு கொழுப்பு இல்லாமல், ஒரு மெலிந்த மற்றும் நல்ல தரமான புரத மூலத்தை கொண்டுள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாலும்தான் உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் முட்டையில் வெள்ளைக்கருவை எடுத்துகொள்கின்றனர். முட்டையில் தசை வளர்ச்சி மற்றும் உடல் அமைப்பை சரிசெய்வதற்கான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. மேலும், இதில் வைட்டமின்கள் B2, B6, B12, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன.
எடை குறைப்பு:
முட்டை வெள்ளைக் கரு புரதத்தில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்லது. இது தசை வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமின்றி எடையை குறைக்கவும் உதவுகிறது. உணவுல் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொள்வது தேவையற்ற பசியை கட்டுப்படுத்த உதவி செய்யும்.
இதய ஆரோக்கியம்:
முட்டை வெள்ளைக்கருவில் கொழுப்பு குறைவாக இருப்பது தெரிந்ததே. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனால், இரத்தத்தில் எல்.டி.எல் மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது . மேலும், இதில் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் இருப்பதால் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
லைசின் மற்றும் அர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்கள் முட்டை வெள்ளைக்கருவில் நிறைந்துள்ளன. இது உடலில் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தி மற்றும் திசு பழுதுபார்ப்பு மற்றும் இளமையான சருமத்தை தருகிறது.
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில பக்க விளைவுகள்:
முட்டை எடுத்துகொள்வது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். இது தடிப்புகள், வயிற்று பிரச்சனைகள் அல்லது சுவாச பிரச்சனைகள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். பச்சை முட்டையின் வெள்ளைக் கரு அவிடின் என்ற புரதத்தைக் கொண்டுள்ளது, இது பயோட்டினுடன் (வைட்டமின் பி7) பிணைந்து அதன் உறிஞ்சுதலைத் தடுக்கிறது, இதனால் குறைபாட்டை ஏற்படுத்தும். முட்டை வெள்ளை புரதத்தை அதிகமாக உட்கொள்வது வீக்கம் , வாயு அல்லது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பச்சை முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவதால் சால்மோனெல்லா தொற்றுடன் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட முட்டை வெள்ளைக்கரு பொருட்கள் இந்த ஆபத்தை குறைக்கின்றன.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)