Healthy Pregnancy Diet: புது தம்பதி கருத்தரிக்க திட்டமா..? இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல..!
Foods For Conception: தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் உங்கள் கருத்தரிக்கும் திட்டங்கள் கெட்டுவிடுகிறது. எனவே, நீங்கள் கருத்தரிக்க விரும்பினால், முதலில் உங்கள் உணவை முறையை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான முறையில் குழந்தைக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். அந்தவகையில், கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய இந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

திருமணம் ஆன புதிய தம்பதியினர் கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே தங்களது முதல் குழந்தைக்கான திட்டமிடலை தொடங்கிவிடுகிறார்கள். அதேநேரத்தில், சில தம்பதியினர் குழந்தை பெற்றுகொள்ளும் (Trying To Conceive) திட்டத்தை தள்ளி போடுகிறார்கள். தள்ளி போட நினைக்கு தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை நின்றுவிடுகிறது. திட்டமிட்ட தம்பதியினருக்கு அதற்கான வேலையை தொடங்கிய பிறகும், பெண்கள் கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதற்கு, நவீன வாழ்க்கை முறையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. அதன்படி, தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் உங்கள் கருத்தரிக்கும் திட்டங்கள் கெட்டுவிடுகிறது. எனவே, நீங்கள் கருத்தரிக்க விரும்பினால், முதலில் உங்கள் உணவை முறையை மாற்ற வேண்டும். அந்தவகையில், கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய (Fertility Diet) இந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது..?
நீங்களும் குழந்தை திட்டமிடலுக்குத் தயாராகத் தொடங்கியிருந்தால், முதலில் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் துரித உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதன்படி, நீங்கள் தினசரி பீட்சா, பர்கர், பாக்கெட் ஸ்நாக்ஸ், பிரஞ்சு ஃப்ரைஸ் போன்ற உணவுகளை உட்கொண்டால், இது டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கூடுதல் உப்பு உங்கள் உடலில் நுழைய வழிவகுக்கும். இது, அண்டவிடுப்பை பாதித்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
கூல்டிரிங்ஸ் மற்றும் காஃபின்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து, கூல்டிரிங்ஸ் மற்றும் காஃபின் கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. இவற்றை எடுத்துகொள்வது கருவுறுதலை பாதிக்கலாம். இது தவிர, காஃபின் கருப்பை இரத்த ஓட்டத்தைக் குறைத்து, கருத்தரிப்பதில் தாமதத்தை உண்டாக்கலாம்.
மது மற்றும் புகை பழக்கம்:
மது மற்றும் சிகரெட் இரண்டும் பெண்களின் கருத்தரிக்கும் திறனை பாதிப்பது மட்டுமல்லாமல், ஆண்களின் கருவுறுதலையும் குறைக்கிறது. இது முட்டைகளின் தரம் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை என இரண்டையும் பாதிக்கும். எனவே, இதுபோன்ற காரணிகளை தவிர்ப்பது நல்லது.
அதிக எண்ணெய் உணவு:
அதிக எண்ணெய் கொண்ட உணவு பொருட்கள் மற்றும் அதிகபடியான அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன் பிரச்சனையை அதிகரிக்கும். இது அண்டவிடுப்பு, ஹார்மோன் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே, இதுபோன்ற உணவை உட்கொள்வதை ஒருவர் தவிர்க்க வேண்டும்.
கருத்தரிக்க என்ன உணவு முறை பின்பற்ற வேண்டும்?
ஆரோக்கியமான முறையில் குழந்தைக்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். அதற்கு முதலில், உங்கள் உணவில் அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவும். அதேபோல், கால்சியம், ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள், பச்சை இலை காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம். மேலும், முடிந்தவரை பலவகையான பழங்களை எடுத்து கொள்வதுடன், போதுமான தூக்கம் கிடைக்கும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.