Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Benefits of Onion : கோடைகாலத்தில் வெயிலை எதிர்கொள்வது மிகவும் சவாலானது. உணவு பழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம் வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். குறிப்பாக கோடை பருவத்தில் வெங்காயம் எடுத்துக்கொள்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
வெங்காயத்தின் நன்மைகள்
karthikeyan-s
Karthikeyan S | Published: 17 Apr 2025 22:36 PM

பொதுவாக கோடைகாலத்தில் (Summer) நமது உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படையக் கூடும். இதனால் முன்பை காட்டிலும் நமது உடல் நலனை பாதுகாப்பது அவசியம். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. கோடை காலத்தில் உடலில் நீர் சத்து குறைந்து அதனால் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே அதிகமாக தண்ணீர் குடிப்பது முக்கியம். தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் வரை கண்ணாடி தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கோடையில் உடலின் வெப்பநிலை மிகவும் அதிகரித்து ஹீட் ஸ்டிரோக் (Heat Stroke) ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக வெப்பத்தில் வெளியே செல்லும் போது, உடலில் எனர்ஜி குறைந்து சோர்வு அதிகரிக்கும். பொதுவாக அந்ததந்த சீசனில் கிடைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இந்த கோடையில் இளநீர், தர்பூசனி (Watermelon), வெள்ளரிக்காய் போன்ற இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்வது வெயிலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள உதவும்.

அந்த வகையில் கோடை காலத்தில் அதிக வெங்காயம் எடுத்துக்கொள்வது நமது உடலுக்கு பல நன்மைகளை அது ஏற்படுத்தும். வெங்காயத்தில் அதிக அளவு நீர் உள்ளது. இதன் காரணமாக நமது உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும். வெங்காயத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. கோடைகாலத்தில் நமது உடலில் எலக்ட்ரோலைட் குறைபாட்டை தடுக்கிறது.

வெங்காயத்தில் இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் பண்புகள் உள்ளன. இது கோடை காலத்தில் ஏற்படும் அதிக உடல் வெப்பத்தை குறைக்க உதவி செய்யும். வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது ஓரளவு சமைத்து எடுத்துக்கொள்ளும்போது அதில் உள்ள குவெர்சிடின் மற்றும் சல்ஃப்ர் நமது உடலில் வியர்வையை தூண்டி நமது உடலை குளிர்ச்சியடையச் செய்யும் என்று கூறப்படுகிறது.

கோடைகாலத்தில் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உடலில் ஆசிடேட்டிவ் ஸ்டிரெஸ்ஸை குறைக்கவும், யுவி கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கவும் உதவுகின்றன. வெங்காயம் ஜீரணத்தை மேம்படுத்தவும், குடலின் செயல்பாட்டை சீராக்கவும் உதவுகிறது. இது உங்கள் உடல் சீராக வேலை செய்யவும் உதவுகிறது.

கோடை காலத்தில் வெங்காயத்தை உணவில் சேர்ப்பது, வெப்பம் மற்றும் சூரிய கதிர்வீச்சினால் ஏற்படும் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு அளிக்கிறது. அது உடல் வெப்பத்தை குறைத்து, நீர் சத்து குறைவு மற்றும் சளி பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். மேலும், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி காம்பவுண்டுகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அதனால், கோடை காலத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது ஒரு சிறந்த வழி ஆகும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ
மதிமுகவில் மோதல்? பதவியை தூக்கி எறிந்த துரை வைகோ...
சீலம்பூர் கொலை: "லேடி டான்" என்ற பெண் குற்றவாளிக்கு தொடர்பா..?
சீலம்பூர் கொலை:
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!
15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிம்புவுடன்.. நடிகை திரிஷா!...
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?
வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..?...
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?
குடியரசுத் துணைத் தலைவருடன் ஆளுநர் ரவி சந்திப்பு.. பின்னணி என்ன?...
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
அந்த 4 மாதத்தை மறக்க முடியாது.. நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!...
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்
நீலகிரி இ-பாஸ் சிக்கல்: காத்திருந்து திண்டாடிய சுற்றுலாப்பயணிகள்...
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!
கொடூர சம்பவம்.. 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற தாய்!...
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!
முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்? GTயை எதிர்கொள்ளும் DC!...
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ திட்டம் - 2 ஆம் கட்ட சோதனை எப்போது?...
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!
ராசியை மாற்றும் சூரியன்.. இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!...