Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடைகாலத்தில் கரும்புச்சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

Sugarcane Juice: கோடைகாலம் தொடங்கியுள்ளதால் அடுத்த 3 மாதங்களுக்கு வெப்பத்தில் இருந்து நமது உடல் நிலையை பாதுகாக்க இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் கோடைகாலத்தில் கரும்புச்சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் கரும்புச்சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 12 Apr 2025 23:30 PM

தமிழ்நாட்டில் (Summer) கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் அடுத்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகியய 3  மாதங்கள் வெயிலின் தாக்கம்  அதிகரித்து காணப்படும். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடுமையான வெயிலின் தாக்கத்தால், வெப்ப அலைகள் (Heat Waves) உருவாகும். இதனால் தோல் சம்மந்தமான பிரச்னைகள் தொடங்கி பல உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்தும்.   அதிக வெயிலை சமாளிப்பதற்கான வழிமுறைகள் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.  வெளியில் செல்வதற்கு முன் சரியான அளவு நீர் அருந்துவது மற்றும் இயற்கை பானங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. இவை உடலை தேவையான நீர் சத்தை ஏற்படுத்தி, வெப்பத்தை சமாளிக்க உதவும்.

இந்த சூழலில், இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு போன்றவை வெயிலின் தாக்கத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் புத்துணர்வையும் அளிக்கின்றன. குறிப்பாக கரும்புச்சாற்றில் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதுகுறித்து ஆய்வு கட்டுரைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றனர். கரும்புச்சாறில் உள்ள நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கரும்புச்சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

மணிகன்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தியின் படி கரும்பு சாற்றில் உள்ள இயற்கை சர்க்கரை உடனடி ஆற்றலை வழங்கி, உடல் சோர்வை குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.​ மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களுக்கு கரும்பு சாறு ஒரு இயற்கை தீர்வாக செயல்படுகிறது.​ பொட்டாசியம் நிறைந்த கரும்பு சாறு, செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று தொற்றுகளைத் தடுக்கும். ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கரும்பு சாறு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.​ 

அல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருவை குறைத்து, சருமத்திற்கு ஆரோக்கியமான ஒளிர்வை வழங்குகின்றன. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் பற்களை வலுப்படுத்தி, வாய்த் துர்நாற்றத்தை குறைக்க உதவுகின்றன. இயற்கையான டையூரெடிக் பண்புகள் சிறுநீரின் ஓட்டத்தை மேம்படுத்தி, சிறுநீரகங்களை சுத்திகரிக்க உதவுகின்றன.

கரும்புச்சாறு, கோடை வெயிலில் உடலை பாதுகாக்கும் சிறந்த இயற்கை பானமாக திகழ்கிறது. இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துகள், அதிக வியர்வையால் குறையும் மினரல்களையும் நீர்ச்சத்தையும் மீண்டும் அளித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. பல மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூற்று படி, கரும்பு சாறு உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, உடலுக்கு தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும், ஜீரண முறையை மேம்படுத்தவும், சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பல ஆய்வுகள், கரும்புச் சாற்றில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள், கோடையின் வெப்பத்தால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக கூறுகின்றன.

மொத்தத்தில், தமிழ்நாட்டில் கடுமையான வெப்பத்தையும் வெப்ப அலைகளையும் எதிர்கொள்ளும் இந்த கோடை பருவத்தில், கரும்பு சாறு போன்ற இயற்கையான, சத்தான பானங்களை அருந்துவது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும்.

அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?...
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...