Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – தற்காத்துக்கொள்வது எப்படி?

Summer Eye Safety Tips: கோடை கால வெப்பம் நம் கண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். அதிகமான யூவி கதிர்கள், தூசி, மற்றும் வெப்பத்தின் காரணமாக கண்கள் வெகுவாக பாதிக்கும். இந்த கோடையில் நம் கண்களை பாதுகாக்க, கடைபிடிக்க வேண்டிய 8 முக்கியமான குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் – தற்காத்துக்கொள்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 21 Apr 2025 18:21 PM

சுட்டெரிக்கும் கோடைகாலம் (Summer) வந்துவிட்டது. இன்னும் 2 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலில் இருந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக இந்த கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் உடல் மட்டுமல்ல கண்களும் (Eyes) அதிக பாதிப்பை சந்திக்கும். அதிகமான யுவி கதிர்கள் (UV Rays), தூசி மற்றும் வெப்பத்தால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மோசமாகக் கூடும். கண்கள் என்பது மிகவும் முக்கியமான உறுப்பு மட்டுமல்லாது மிகவும் சிக்கலான உறுப்பும் கூட. எனவே கண்களை மிகவும் பாதுகாப்புடன் கையாள வேண்டும். எனவே உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்காக இந்த முக்கியமான 8 குறிப்புகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

  • மக்கள் சன் கிளாஸ் குறித்து சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் அழகுக்காக அணிவதாக கருதுகின்றனர். சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் யுவி கதிர்கள் நமது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். யுவி கதிர்களை சமாளிக்கக் கூடிய சன் கிளாஸ் பயன்படுத்துவது முக்கியம்.
  • கண்களில் ஏற்படும் வறட்சியால் எளிதில் எரிச்சல், சிவப்புத்தன்மை ஏற்படலாம். அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். அடிக்கடி கண்களில் வறட்சியை உணர்கிறவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின் படி ஐடிராப்ஸ் பயன்படுத்துவது கண்களைப் பாதுகாக்கும்.
  • நமது கைகளில் தூசி, கிருமிகள் நிறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கண்களை தொடுவது மற்றும் கசக்குவது கண் ஒவ்வாமை மற்றும் வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும். மேலும் கண்களில் உள்ள லென்ஸ் பாதிக்கப்படும்.
  • தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. அவசியமென்றால் முறையான பாதுகாப்புடன் செல்வது சிறந்தது.
  • வைட்டமின்கள் A, C, E  மற்றும் ஓமேகா  3 உள்ள உணவுகள் கண்களுக்கு நல்லது. எனவே உணவில் கேரட், முட்டை மற்றும் கீரைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • நாம்  பயன்படுத்தும் கண் கண்ணாடிகள், லென்ஸ் அனைத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  அவசியம் ஏற்பட்டால் மட்டும் சுத்தமான கை கொண்டே கண்களை தொட வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாமல் கண்களை தொடுவது நல்லது அல்ல.
  • கண்களை அதிகமாக உபயோகிக்கும் போது, குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 வினாடிகள் ஓய்வைக் கொடுங்கள். அதாவது 20-20-20 விதிமுறைக்கு ஏற்ப 20 நிமிடம் பார்த்த பிறகு, 20 அடி தொலைவில் உள்ளதை 20 வினாடிகள் பாருங்கள்.
  • வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள். இதனால் மிகப்பெரும் பிரச்னைகள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க உதவும்.

கோடையில் உடல்நலம் போலவே, கண்களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இக்குறிப்புகள் உங்கள் கண்களை பாதுகாக்கவும், நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும். உடனடியாக இந்த பழக்கங்களை கடைபிடிப்பது நமது கண்களை பாதுகாக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...