Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள் – தவிர்ப்பது எப்படி?

Sugar Consumption Warning : இனிப்பு உணவுகள் நமக்கு குறுகிய கால மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அதிக அளவில் இருக்கும் சர்க்கரை உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தவிர்ப்பது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள் – தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 25 Apr 2025 22:33 PM

இந்தியாவில் (India) எந்த ஒரு விழாவாக இருந்தாலும், இனிப்பு இல்லாமல் நிச்சயமாக கொண்டாடப்படாது. பண்டிகைகள், பிறந்தநாள், திருமணங்கள் என எல்லா மகிழ்ச்சியான தருணங்களிலும் நாம் முதலில் இனிப்பை வழங்குகிறோம். ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பது மரபாகவே இருக்கிறது. அவ்வாறு வழங்கப்படும் இனிப்புகளின் முக்கிய பகுதியாக இருக்கும் சர்க்கரை (Sugar) தான் நம்முடைய உடல் நலனை பாதித்து வருகிறது என்பதே வேதனையான உண்மை. இன்று நாம் சாப்பிடும் சர்க்கரை எல்லாம் நேரடியாகவே இல்லாமல் மறைமுகமாக உணவின் வழியாக உட்கொள்கிறோம். குளிர்பானங்கள், கேக் (Cake), பிஸ்கட், பேக்கரி பொருட்கள் என்ற பெயரில் விற்கப்படும் உணவுகளிலும் சர்க்கரை அதிக அளவில் கலக்கப்படுகின்றது. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவுகள் மூலமாகவே நாமே நம்மை நோயாளிகளாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

சர்க்கரை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் 7 முக்கியமான உடல்நல பாதிப்புகள்

  • சர்க்கரை என்பது வெறும் காலோரி மட்டுமே கொண்டது. அதில் எந்தவிதமான ஊட்டச்சத்துகளும் இல்லை. அதிகமாக சர்க்கரை உட்கொள்வது, குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்க்கையை அதிகரிக்கிறது. இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
  • அதிக சர்க்கரை உட்கொள்வது, உடலை இன்சுலின் ஹார்மோனுக்கு எதிர்ப்பாக மாற்றுகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு நிலையை உருவாக்கி, டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • சர்க்கரை அதிகமாக உட்கொள்வது, உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் கொழுப்பு படிதல் மற்றும் நீண்டகால அழற்சி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இவை அனைத்தும் இதய நோய்களுக்கு முக்கியமான காரணிகள்.
  • சர்க்கரை உட்கொள்வது, மூளையின் ரிவார்ட் சிஸ்டத்தை தூண்டி, அதற்கு அடிமையாகும் நிலையை உருவாக்குகிறது. இது மன அழுத்தம், கவலை மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
  • அதிக சர்க்கரை, வாயில் உள்ள பாக்டீரியாக்களைத் தூண்டி அமிலங்களை உருவாக்குகிறது. இது பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 
  • சர்க்கரை அதிகமாக உட்கொள்வது, தோலில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை சேதப்படுத்துகிறது. இது தோலில் மடிப்பு, சுருக்கம் மற்றும் முன்கூட்டிய வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • அதிக சர்க்கரை, மூளையின் செயல்பாட்டை பாதித்து, நினைவாற்றல் குறைபாடு மற்றும் ஆல்சைமர் நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

பாதிப்புகளைக் குறைக்கும் வழி

  • சர்க்கரை உட்கொள்ளும் அளவை கட்டுப்படுத்துங்கள்.

  • பழங்கள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமான உணவுகளை தேர்வு செய்யுங்கள்.

  • சர்க்கரை உணவுகளை தவிர்க்க முயற்சிக்கவும்.

  • உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

உங்கள் உடல்நலத்தை பாதுகாக்க, சர்க்கரை உட்கொள்ளும் பழக்கத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். இது உங்கள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான படி ஆகும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !
ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு பஸ் டிக்கெட்டுடன் வந்த பேண்ட் !...
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!
சுற்றுலா பயணிகளுக்கு உதவியவர்கள் இஸ்லாமியர்கள் தான் - மெஹபூபா!...
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!
சிக்கிம் நிலச்சரிவு - சிக்கி தவிக்கும் 1,000 சுற்றுலா பயணிகள்!...
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!
சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் 7 முக்கிய ஆபத்துகள்!...
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் Blend - என்ன ஸ்பெஷல்?...
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!
சம்மருக்கு ஏற்ற ஸ்கின் கேர்.. காபி தூள் இருந்தாலே போதும்!...
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!
தல ஆட்டத்தை பார்க்க வந்த அஜித் - சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ!...
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!
மிரட்டல் அரசியல் பாஜகவின் டிஎன்ஏவில் தான் உள்ளது - கோவி.செழியன்!...
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
த்ரிஷாவின் சூப்பர் ஹிட் படம் 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது...
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!
தாக்குதலின் நோக்கம் சமூகத்தை பிளவுபடுத்தும் - ராகுல் காந்தி!...