இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னை ? அங்காடித் தெருவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் விலகியது ஏன்?

தன்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலனின் இயக்கத்தில் அங்காடித் தெரு படத்தில் ஒப்பந்தமானார். அந்தப் படத்திலிருந்து பாடல்கள் வெளியான போது 4 பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷும் மீதமுள்ள இரண்டு பாடல்களுக்கு விஜய் ஆண்டனியும் இசையமைத்திருந்தினர். படத்துக்கு விஜய் ஆண்டனி பின்னணி இசையமைத்திருந்தார்.

இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னை ? அங்காடித் தெருவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் விலகியது ஏன்?

மகேஷ் - அஞ்சலி - ஜி.வி.பிரகாஷ் குமார்

Published: 

25 Mar 2025 08:53 AM

இயக்குநர் ஷங்கரிடம் (Shankar) காதலன், ஜீன்ஸ், இந்தியன் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய வசந்த பாலன் ஆல்பம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வெற்றிப்படமாக அமையவில்லை. பின்னர் சிறிது இடைவேளைக்கு பிறகு வசந்த பாலன் இயக்கிய படம் வெயில் (Veyil). இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹைனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V.Prakash Kumar), ரஹ்மான் இசையில் ஜென்டில்மேன் படத்தின் சிக்கு புக்கு ரயிலே, முத்து படத்தின் குலுவாலிலே போன்ற பல பாடல்களை பாடியிருக்கிறார்.

குறுகிய காலத்திலேயே தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்

ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு புரோகிராமராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்நியன் படத்தில் காதல் யானை மற்றும் உன்னாலே உன்னாலே படத்தில் ஹலோ மிஸ் போன்ற பாடல்களை பாடியிருக்கிறார். வெயில் படத்தின் வெற்றிக்கு பிறகு குறுகிய காலத்திலேயே பரபரப்பான இசையமைப்பாளராக மாறினார். ரஜினியின் குசேலன், அஜித்தின் கிரீடம், தனுஷின் பொல்லாதவன், சிம்புவின் காளை என மிகப்பெரும் படங்களில் ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய வசந்த பாலனின் இயக்கத்தில் அங்காடித் தெரு படத்தில் ஒப்பந்தமானார். அந்தப் படத்திலிருந்து பாடல்கள் வெளியான போது 4 பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷும் மீதமுள்ள இரண்டு பாடல்களுக்கு விஜய் ஆண்டனியும் இசையமைத்திருந்தினர். படத்துக்கு விஜய் ஆண்டனி பின்னணி இசையமைத்திருந்தார். வசந்த பாலனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே ஜி.வி.பிரகாஷ் அந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் பரவின. அதற்கேற்ப அடுத்தடுத்து வசந்த பாலன் பணியாற்றிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயில் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினர். அந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷுடன் என்ன பிரச்னை?

 

வசந்த பாலனுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக தான் அங்காடித் தெரு படத்திலிருந்து பாதியில் வெளியேறினார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளித்த வசந்த பாலன், ”வெயில் படத்தின் வெற்றியின் காரணமாக ஏகப்பட்ட படங்களில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்பந்தமானார். ஆயிரத்தில் ஒருவன், குசேலன், அஜித்தின் கிரீடம், தெலுங்கு, ஹிந்தி படங்கள் என அவருக்கு வாய்ப்புகளாக குவிந்தன. அவரது ஸ்டுடியோவில் இயக்குநர்கள் பி.வாசு, செல்வராகவன் என பிரபல இசையமைப்பாளர்கள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். பல நாட்கள் அவரை பார்க்க சென்று அமர்ந்திருப்பேன். ஆனால் பார்க்கவே முடியாது. அவரிடம் பாடல்கள் குறித்து பேச முடியாமல் இருந்தது. அதனால் என்னால் படத்தை முடிக்கவில்லை. ஜி.வி.பிரகாஷிடம் பேசிய போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குசேலன் படத்தில் அவருக்கு மிகப்பெரிய சம்பளம். ஆனால் என்னால் அதனை கொடுக்க முடியவில்லை” என்றார்.