அமிதாப் பச்சன் தயாரிப்பு… அஜித் – விக்ரமின் ‘உல்லாசம்’ தோல்விக்கு காரணம் என்ன?
அமிதாப் பச்சன் கார்பரேசன் தயாரித்த முதல் தமிழ் படமான இதில் காதல் கோட்டை வெற்றிக்கு பிறகு அஜித் குமார் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஹீரோயினாக ஸ்ரீதேவியின் உறவினரான மகேஸ்வரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். நேசம் படத்துக்கு பிறகு அஜித் - மகேஸ்வரி இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர்.

அஜித் - விக்ரம்
அஜித் குமார் – விக்ரம் இணைந்து நடித்த ஒரே படம் உல்லாசம். அமிதாப் பச்சன் தயாரிப்பில் வெளியான ஒரே தமிழ் படமும் இதுதான். சமீபத்தில் சிம்பொனி அரங்கேற்றிவிட்டு நாடாளுமன்றத்தில் கலந்துகொண்ட இளையராஜாவை (Ilaiyaraaja) வரவேற்று பேசினார் எம்பி ஜெயா பச்சன். அப்போது உல்லாசம் படத்தை குறிப்பிட்டு பேசிய ஜெயா பச்சன், நாங்கள் இளையராஜாவுடனும் பணியாற்றியிருக்கிறோம், இளையராஜாவின் மகனுடனும் பணியாற்றியிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அவர்கள் தயாரித்த உல்லாசம் படத்துக்கு கார்த்திக் ராஜா (Karthik Raja) இசையமைப்பாளர் என்பதால் அவர் அப்படி சொன்னார். லெஜண்ட் சரவணன் (Legend Saravanan) ஹீரோவாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான லெஜண்ட் படத்தின் இயக்குநர் ஜேடி – ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உல்லாசம் படத்தை நிராகரித்த ஹீரோக்கள்
அமிதாப் பச்சன் கார்பரேசன் தயாரித்த முதல் தமிழ் படமான இதில் காதல் கோட்டை வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தில் அஜித் குமார் ஹீரோவாக ஒப்பந்தமானார். ஹீரோயினாக ஸ்ரீதேவியின் உறவினரான மகேஸ்வரி ஒப்பந்தம் செய்யப்பட்டார். நேசம் படத்துக்கு பிறகு அஜித் – மகேஸ்வரி இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர். இன்னொரு ஹீரோவாக பிரபு தேவா, அருண் விஜய் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டு பின்னர் விக்ரம் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் பலரும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
உல்லாசம் படத்தின் கதை
தேவின் (விக்ரம்) அப்பா ஜே.கே. ஒரு பெரிய டான். மற்றொருபுறம் குருவின்(அஜித்) அப்பா தங்கையா ஒரு பேருந்து டிரைவர். குரு சிறுவயதில் ஜே.கே.வின் செயல்களில் ஈர்க்கப்பட்டு, மெல்ல குற்ற செயல்களில் ஈடுபட தொடங்குகிறார். குருவின் தந்தை தங்கையா, தேவை நல்ல மனிதனாக வளர்க்கிறார். கல்லூரியில் தேவ் ஒரு பிரபலமான பாடகர். தேவ் மற்றும் குரு இருவரும் மேகாவை(மகேஸ்வரி) காதலிக்கிறார்கள். ஆனால் மேகா குருவை நேசிக்கிறார். இந்த முக்கோண காதல் கதையில் முடிவு என்ன என்பதே இந்தப் படத்தின் கதை.
படத்துக்கு பலமாக அமைந்த கார்த்திக் ராஜாவின் பாடல்கள்
உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே படங்களின் இயக்குநர் ஜீவா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர். இந்த படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பாடல்கள் பெரும் பக்கபலமாக அமைந்திருக்கும். பெரும்பாலான பாடல்களை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கரின் மகன் பார்த்தி பாஸ்கர் எழுதியிருந்தார். முத்தே முத்தம்மா பாடலை கமல்ஹாசன் பாடினார். வாலிபம் வாழ சொல்லும் பாடலை கார்த்திக் ராஜா, பிரபு தேவா, ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியிருந்தனர். பாலகுமாரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களால் இன்னும் இந்தப் படம் நினைவுகூறப்படுகிறது.
அஜித்துக்கு வரிசையாக 5 தோல்விகள்
அன்றைய காலக்கட்டத்தில் வெளியான காதல் தேசம் மற்றும் மின்சாரக் கனவு போன்ற படங்களும் இதே போன்ற முக்கோண காதல் கதையம்சத்துடன் வெளியானதும் இந்தப் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அன்றைய காலக்கட்டத்தில் வெளியான காதல் தேசம் மற்றும் மின்சாரக் கனவு போன்ற படங்களும் இதே போன்ற முக்கோண காதல் கதையம்சத்துடன் வெளியானதும் இந்தப் படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்துக்கு அதற்கு முன் வந்த நேசம், ராசி போன்ற படங்களும் உல்லாசம் படத்துக்கு பிறகு பகைவன், ரெட்டை ஜடை வயசு போன்ற போடங்களும் தோல்வியடைந்தன. 5 தோல்விகளால் துவண்டிருந்த அஜித்தின் கேரியர் மீண்டும் காதல் மன்னன் படத்துக்கு பிறகே மீண்டும் சூடுபிடித்தது.