Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்த ஏன்? அப்டேட் இதோ

Vijay Sethupathi with Puri Jagannadh: தமிழில் விடுதலை பாகம் 2 வெளியான பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஏஸ் மற்றும் ட்ரெய்ன் என இரண்டு படங்கள் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக டோலிவுட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறித்து அறிவிப்பு வெளியானது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்த ஏன்? அப்டேட் இதோ
பூரி ஜெகன்நாத், விஜய் சேதுபதிImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Apr 2025 07:47 AM

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathy) இறுதியாக இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaran) இயக்கத்தில் உருவான விடுதலை பாகம் 2 படத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் சூரியின் கதை முழுவதுமாக காட்டப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியின் கதை காட்டப்பட்டிருந்தது. முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்பதே நிதர்சனமான உணமை. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது இயக்குநர் ஆறுமுகம் குமார் இயக்கத்தில் ஏஸ் (ACE) படம் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படம் ஆகியவற்றை நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விரைவில் டோலிவுட் இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தற்காலிகமாக இந்தப் படத்திற்கு பூரி சேதுபதி என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் பூரி ஜெகன்நாத் முன்னதாக நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் வெளியான டபுள் ஐஸ்மார்ட் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநரின் அடுத்த படமாக விஜய் சேதுபதியுடன் இணைந்தது உள்ளது.

மேலும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் முன்னதாக வெளியான படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் வரவிருக்கும் படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என்று நடிகர் விஜய் சேதுபதியிடம் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “என்னுடன் பணியாற்றும் இயக்குநர்களின் முந்தைய படங்களின் வெற்றி தோல்வியை நான் கருத்தில் கொள்ளவில்லை. அந்த இயக்குநர்கள் கொண்டுவரும் கதை எனக்குப் பிடித்திருந்தால், அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்கிறேன்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி ” இயக்குநர் பூரி ஜெகன்நாத் எனக்குப் பிடித்த ஒரு கதையைச் சொன்னார். நான் இதற்கு முன்பு இதுபோன்ற படங்களில் நடித்தது இல்லை, நான் எப்போதும் புதிய கதைகளைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். நான் நடித்த ஒன்றையே திரும்ப திரும்ப நடிக்க விரும்பவில்லை” என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் இந்தப் படத்தில் நடிகை தபுவுடன் இணைந்து நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் நடிகர் விஜய் சேதுபதி அந்தப் பேட்டியில் தெரிவித்தார். தபு எப்போதும் ஒரு சிறந்த நடிகை என்றும், இதுவரை அவருடன் இணைந்து பணியாற்றியதில்லை என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் நடிகை ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்த சிவராஜ்குமார்...
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்
SC: விசாரணைக்கு வரும் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்...