இந்தியாவின் டாப் 10 வெப் தொடர்கள் – உங்க சாய்ஸ் எது?

நெட்ஃபிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லிவ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சியினால், இந்திய வெப் தொடர்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுவருகின்றன. மிர்சாபூர் போன்ற அதிரடியான கிரைம் திரில்லர்களிலிருந்து குல்லாக் மற்றும் பஞ்சாயத் போன்ற மனதைக் கவரும் கதைகள் என அனைத்து தரப்பு பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

இந்தியாவின் டாப் 10 வெப் தொடர்கள் - உங்க சாய்ஸ் எது?

இந்தியாவின் டாப் 10 வெப் தொடர்கள்

Updated On: 

24 Mar 2025 09:27 AM

இந்திய வெப் தொடர்களும் (Web Series) ஓடிடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த அளவுக்கு இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ற கதைகள்,  வித்தியாசமான ஜானர்களில் வெளியாகிவருகின்றன. வழக்கமான தொலைக்காட்சி தொடர்களைப் போல் அல்லாமல் பதைரியமான கதைசொல்லும் முறை, சிக்கலான கதாபாத்திரங்கள் என சுவாரசியமாக காட்சி அனுபத்தை வழங்குகின்றன. நெட்ஃபிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனி லிவ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் வளர்ச்சியினால், இந்திய வெப் தொடர்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுவருகின்றன. மிர்சாபூர் போன்ற அதிரடியான கிரைம் திரில்லர்களிலிருந்து குல்லாக் மற்றும் பஞ்சாயத் போன்ற மனதைக் கவரும் கதைகள் என அனைத்து தரப்பு பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

கில்டி மைன்ட்ஸ் (Guilyt Minds )

இது நீதித்துறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெப் தொடர். நீதி நெறி தவறாத ஒரு குடும்பத்துக்கும், எல்லாவிதமான மோசமான வழக்குகளை கையாளும் சட்ட நிறுவனத்தையும் பற்றிய கதை. இந்த வெப் தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம். ஐஎம்டிபியில் இதற்கு 7.3 ரேட்டிங் கிடைத்துள்ளது.

பஞ்சாயத் (Panchayat)

அபிஷேக் என்ற இன்ஜினியர் தனக்கு வேலை கிடைக்காததால் உத்தர பிரதேசத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலராக பணி செய்கிறார் அவர் எதிர்கொள்ளும் சவால்களே இந்தத் தொடரின் கதை. இது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் பிரைம் வீடியோவில் இந்தத் தொடரை பார்க்கலாம். இந்தத் தொடருக்கு ஐஎம்டிபியில் 9.0 ரேட்டிங் கிடைத்துள்ளது.

மாய் (Mai)

மகளை கொன்றவரை கண்டுபிடித்து பழிவாங்கும் தாயின் கதையே இந்த வெப் சீரிஸ். நெட்பிளிக்ஸில் இந்தத் தொடரை பார்க்கலாம். இந்த தொடருக்கு ஐஎம்டிபியில் 7.0 ரேட்டிங் கிடைத்துள்ளது.

குல்லக் (Gullak)

இந்தத் தொடர் மிஷ்ரா குடும்பத்தின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. சோனி லிவ்வில் இந்த வெப் தொடரை பார்க்கலாம். ஐஎம்டிபியில் இந்தத் தொடருக்கு 9.1 ரேட்டிங் கிடைத்துள்ளது.

ஸ்கேம் 1992 – தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி (Scam 1992)

ஸ்டாக் புரோக்கரான ஹர்ஷத் மேத்தாவின் அசாத்திய வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் பேசுகிறது. இந்த வெப் சீரிஸ் சோனி லிவ்வில் இருக்கிறது. இந்த வெப் தொடருக்கு 9.2 ரேட்டிங் கிடைத்துள்ளது.

ஹோம் சாந்தி (Home Shanti)

நடுத்தர வர்க்க குடும்பம் வீடு கட்ட மேற்கொள்ளும் முயற்சியே இந்த வெப் தொடரின் கதை. இந்த தொடருக்கு ஐஎம்டிபியில் 8.0 ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்தத் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

தி ஃபேமிலி மேன் (The Family Man)

நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸியில் பணியாற்றுபவர் நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து காப்பதுடன் தனது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. அமேசான் பிரைமில் இந்தத் தொடர் இருக்கிறது. இந்தத் தொடருக்கு ஐஎம்டிபியில் 8.7 ரேட்டிங் கிடைத்துள்ளது.

கோட்டா பேக்டரி (Kota Factory )

உயர்தர பயிற்சி மையங்களில் சிறந்த கல்லூரி மாணவர்கள் பயிலும் நகரத்தில் விதிவிலக்கான சாதாரண மாணவரும் அவரது நண்பர்களும் எதிர்கொள்ளும் சவால்களே இந்த வெப் தொடர். இந்த தொடருக்கு ஐஎம்டிபியில் 9 ரேட்டிங் கிடைத்துள்ளது. நெட்பிளிக்ஸில் இந்த தொடரை பார்க்கலாம்.

பதால் லோக் (Paatal Lok)

சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாத்தி ராம் சௌத்ரி பெரிய வழக்குகளை எப்படி கையாள்கிறார் என்பதை கதை. இந்த தொடருக்கு 8.2 ரேட்டிங் கிடைத்துள்ளது. அமேசான் பிரைமில் இருக்கிறது.

மிசார்பூர் (Mizarpur)

மசார்பூர் நகரில் நடக்கும் அரசியல் மற்றும் குற்ற செயல்கள் மற்றும் அதன் பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் வெப் தொடர். ஐஎம்டிபியில் இந்தத் தொடருக்கு 8.4 ரேட்டிங் கிடைத்துள்ளது.