சிறந்த 10 மலையாள திரில்லர் படங்கள் – உங்க சாய்ஸ் எது ?
மிக குறைந்த செலவில் தரமான படங்களை எடுக்கின்றனர். நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதாரண சம்பவங்களைக் கூட சுவாரசியமான திரைக்கதை அமைத்து அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திரைப்படமாக மாற்றிவிடுகிறார்கள். அதனால் தான் அவர்களது படங்களுக்கென ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.

திரில்லர் (Thriller), காமெடி என எந்த விதமான ஜானராக இருந்தாலும் உண்மைக்கு நெருக்கமாக கதை சொல்வதில் மலையாளம்(Malayalam) சினிமா தனித்துவமானது. குறிப்பாக அதன் கதாப்பாத்திரங்களும் பெரிதாக ஹீரோயிச காட்சிகள் என தனியாக எதுவும் இல்லாமல் கதைக்கு தேவையானதை மட்டும் செய்கின்றனர். மிக குறைந்த செலவில் தரமான படங்களை எடுக்கின்றனர். நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதாரண சம்பவங்களைக் கூட சுவாரசியமான திரைக்கதை அமைத்து அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திரைப்படமாக மாற்றிவிடுகிறார்கள். அதனால் தான் அவர்களது படங்களுக்கென ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்குக்கு பிறகு மலையாள சினிமாவிற்கேன பிரத்யேகமாக பார்வையாளர்கள் உருவாகியிருக்கின்றனர். மலையாள சினிமாக்களுக்கென ஓடிடியில் (OTT) நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வகையில் சிறந்த 10 மலையாள திரில்லர் படங்களை இந்த பதிவில் காணலாம்.
கருடன் (Garudan)
அருண் வர்மா இயக்கத்தில் சுரேஷ் கோபி , பிஜு மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 20223 ஆம் ஆண்டு வெளியான படம். பாலியல் குற்றம் தொடர்பாக கல்லூரி பேராசிரியருக்கும் காவல்துறை அதிகாரிக்கும் இடையான போராட்டமே இந்தப் படத்தின் கதை. அமேசான் பிரைம் வீடியோவில் இந்தப் படம் காண கிடைக்கிறது.
கண்ணூர் ஸ்குவாட் (Kannur Squad)
மம்மூட்டி, கிஷோர் நடிப்பில் ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆக்சன் திரில்லர் படம். உண்மை சம்பவத்தை அடிப்பைடயாகக் கொண்டு உருவான படம்.குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க வரும் ஒருறப்பு போலீஸ் குழுவின் பயணத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுமே இந்தப் படத்தின் கதை. ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் இருக்கிறது.
ரோர்சாக் (Rorschach)
மம்மூட்டி, ஆசிப் அலி உள்ளிட்டோர் நடிப்பில் நிசம் பஷீர் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம். உளவியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட லூக் ஆண்டனி என்பவர் எதிர்கொள்ளும் சவால்களே இந்தப் படம். இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் இருக்கிறது.
ஜன கன மன (Jana Gana Mana)
ஷரிஸ் முகமது இயக்கத்தில் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் இருக்கிறது.
மாலிக் (Malik)
மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் பகத் பாசில், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம். கிட்டத்தட்ட மலையாளத்தில் வந்த நாயகன் போன்ற ஒரு கேங்க்ஸ்டர் டிராாமா. இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் இருக்கிறது.
(Nayattu) நயாட்டு
மார்ட்டின் பாக்க்ட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சக்கோ போபன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.
ஜோஜி (Joji)
திலீஸ் போத்தன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம். அமேசான் பிரைம் வீடியோவில் இந்தப் படம் இருக்கிறது.
அஞ்சாம் பதிரா (Anjaam Pathiraa)
மிதுன் மேனுவல் தாமஸ் இயக்கத்தில் குஞ்சகோ போபன், அமினா நிஜம் உள்ளிட்டோர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம். ஒரு காவல்துறையினருக்கும் சீரியல் கில்லருக்கும் இடையிலான கேட் அண்ட மவுஸ் ஆட்டமே இந்தப் படம். இந்தப் படம் ஆமேசான் பிரைமில் இருக்கிறது.
டிரான்ஸ் (Trance)
அன்வர் ரஷீத் இயக்கத்தில் பகத் பாசில், நஸ்ரியா நசீம், கௌதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம். அமேசான் பிரைமில் இந்தப் படம் இருக்கிறது.
சி யூ சூன் (C U Soon)
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில், தர்ஷனா ராஜேந்திரன் ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் நடிப்பில் நேரடியாக கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியான படம்.