ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 இந்திய படங்கள் எது தெரியுமா?
IMDB: . உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த படங்களுக்கு ரேட்டிங்கை வழங்குகின்றனர். ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக தேர்வு செய்வதில் ஐஎம்டிபி முக்கிய பங்கு வகிக்கின்றன. தி ஷாஷங்க் ரிடெம்சன் என்ற திரைப்படம் தான் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங்குடன் (Rating) முதலிடத்தில் உள்ளது.

சூர்யா - ஆர்யா - விக்கி கௌசல்
தி இண்டர்நெட் டேட்டா பேஸ் எனப்படும் ஐஎம்டிபி (IMDB) திரைப்படங்கள், வெப் தொடர்கள் ஆகியவற்றின் தகவல்களை வழங்குகிறது. ஒரு திரைப்படத்தின் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் கதை, படத்தை பற்றிய முக்கிய செய்திகள் ஆகிய தகவல்களை நமக்கு ஐஎம்டிபி அளிக்கிறது. உலக அளவில் இருக்கும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த படங்களுக்கு ரேட்டிங்கை வழங்குகின்றனர். ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக தேர்வு செய்வதில் ஐஎம்டிபி முக்கிய பங்கு வகிக்கின்றன. தி ஷாஷங்க் ரிடெம்சன் என்ற திரைப்படம் தான் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங்குடன் (Rating) முதலிடத்தில் உள்ளது. இந்தப் படத்துக்கு 9.2 ரேட்டிங் கிடைத்துள்ளது. அதே ரேட்டிங்குடன் தி காட்ஃபாதர் முதல் பாகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 9 ரேட்டிங்குடன் தி டார்க் நைட் (The Dark Knight) திரைப்படம் 3 வது இடத்தில் உள்ளது.
ஜெய் பீம் (Jai Bhim)
ஒரு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஆண் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவரது மனைவி வழக்கறிஞரின் உதவியை நாடி தனது கணவர் குறித்த உண்மையை எப்படி நிரூபிக்கிறார் என்பதே கதை. சூர்யா தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தில் அவருடன் லிஜோமோல், மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.ஜே.ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைமில் இருக்றது. ஐஎம்டிபி இந்தப் படத்துக்கு 8.7 ரேட்டிங் கிடைத்துள்ளது.
சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai)
1970களில் வட சென்னையில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அக்காலகட்டத்தின் அரசியலையும் இயல்பாக பேசியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படமம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்தப் படத்துக்கு ஐஎம்டிபியில் 8.5 ரேட்டிங் கிடைத்துள்ளது.
திரிஷ்யம் 2 (Drishyam 2)
திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான இதில் ஜார்ஜ் குட்டி தனது குடும்பத்தை காக்க என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டு வெல்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைமில் இந்தப் படம் இருக்கிறது. ஐஎம்டிபியில் இநதப் படத்துக்கு 8.4 ரேட்டிங் கிடைத்துள்ளது.
சர்தார் உத்தம் (Sardar Udham)
சர்தார் உத்தம் சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாான படம். சூஜித் சர்கார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்கி கௌசல் ஹீரோவாக நடித்துள்ளார். ஐஎம்டிபியில் இந்தப் படத்துக்கு 8.3 ரேட்டிங் கிடைத்துள்ளது. அமேசான் பிரைமில் இந்தப் படம் இருக்கிறது.
அமர் சிங் சம்கிலா (Amar Singh Chamkila)
இம்தியாஸ் அலி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பரிநீதி சோப்ரா தில்ஜித் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். நெட்பிளிக்ஸ்லி இந்தப் பட் இருக்கிறது. ஐஎம்டிபியில் இந்தப் படத்துக்கு 7.8 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
மகான் (Mahaan)
காந்தியவாதி குடும்பத்தில் பிறந்த மகான் ஒரே ஒரு நாள் தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ முடிவெடுக்க, அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே இந்தப் படத்தின் கதை. ஐஎம்டிபி இந்தப் படத்துக்கு ஐஎம்டிபி தளத்தில் இந்தப் படத்துக்கு 7.7 ரேட்டிங் கிடைத்துள்ளது.
குல்மோஹர் (Gulmohar )
புதிய இடத்துக்கு குடிபெயர இறுக்கும் பத்ரா குடும்பத்தினர் 31 ஆண்டுகளாக வாழ்ந்த வீட்டில் கடைசி 4 இருப்பதே படத்தின் கதை. ராகுல் வி.சிட்டெல்லா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஐஎம்டிபியில் இந்தப் படத்துக்கு 7.6 ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
தி ஸ்டோரி டெல்லர் (The Story Teller)
சத்யஜித் ரேயின் சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவான படம். கடந்த 2022 ஆம் ஆண்டு பாபநாசம் படத்தில் காணாமல் போன வருண் பிரபாகரனின் அப்பாவாக நடித்த நடித்துள்ள ஆனந்த் மகாதேவன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஐஎம்டிபியில் இந்தப் படத்துக்கு 6.9 ரேட்டிங் கிடைத்துள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் படத்தை பார்க்கலாம்.
ஏகே vs ஏகே (AK vs AK)
விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனில் கபூர், அனுராக் காஷ்யப் நடித்துள்ளனர். ஹீரோவின் மகளை கடத்தும் இயக்குநர் அந்த ஹீரோ தன் மகளை தேடுவதை மறைமுகமாக படமாக்கி வெற்றிபெற செய்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்துக்கு ஐஎம்டிபியில் 6.9 ரேட்டிங் கிடைத்திருக்கிறது. நெட்ஃபிளிக்ஸில் இந்தப் படத்தை பார்க்கலாம்.
அட்ராங்கி ரே (Atrangi Re)
ராஞ்சனா படத்துக்கு பிறகு தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இணைந்துள்ள படம். நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்தப் படத்துக்கு ஐஎம்டிபியில் 6.5 ரேட்டிங் கிடைத்துள்ளது.