நெட்ஃபிளிக்ஸில் 5 சிறந்த ரொமாண்டிக் திரில்லர் படங்கள் – உங்க சாய்ஸ் எது?
Netflix : ரொமான்டிக் திரில்லர் என்ற ஜானரில் தமிழில் வந்த படங்கள் மிக குறைவு. கஜினி, ஐ போன்ற சில உதாரணங்களை சொல்லாம். தமிழில் கடைசியாக வந்த அஜித் , திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி படத்தை அந்த வகையில் சேர்க்கலாம். ஆனால் ஹாலவுட்டில் ஏராளமான படங்கள் இந்த ஜானரில் வெளியாகியிருக்கின்றன.

பொதுவாக தமிழ் சினிமாவில் காதலைக் கொண்டாடும் ரொமான்ஸ் படங்கள், ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டுவரும் திரில்லர் படங்கள் என தனித்தனியாக இரண்டு ஜானர்களில் ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இரண்டையும் சேர்த்து ரொமான்டிக் திரில்லர் என்ற ஜானரில் தமிழில் வந்த படங்கள் மிக குறைவு. கஜினி(Ghajini), ஐ போன்ற சில உதாரணங்களை சொல்லாம். தமிழில் கடைசியாக அஜித் , திரிஷா (Trisha) நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி (Vidaamuyarchi) படத்தை அந்த வகையில் சேர்க்கலாம். ஆனால் ஹாலவுட்டில் ஏராளமான படங்கள் இந்த ஜானரில் வெளியாகியிருக்கின்றன. ரொமான்டிக் திரில்லர் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக நெட்ஃபிளிக்ஸில் உள்ள 5 சிறந்த ரொமான்டிக் திரில்லர் படங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஹிட் மேன் (ஹிட் மேன் )
இயக்குநர் ரிச்சர்டு லிங்க்லேட்டர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் மே 24, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ஜுன்,, 2024 அன்று வெளியானது. நியூ ஓர்லியன்ஸில் பள்ளி ஆசிரியராக இருக்கிறார் கேரி ஜான்சன். காவல்துறையினருக்காக போலியான கொலைகாரராக போலியாக நடித்துவருகிறார். அவருக்கு போலியா நடித்து கொலைகாரர்களை காவல்துறையினருக்கு பிடித்து கொடுக்க உதவுகிறார். இந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து தப்பிக்க அவரிடம் கோரும் நிலையில் அவர் எதிர்கொள்ளும் சவால்களை சுவாரசியமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ரெபெக்கா (Rebecca)
ஏற்கனவே இதே நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய படம் ஆஸ்கர் வென்றது. அதன் பிறகு அந்த நாவலை பலரும் திரைப்படமாக எடுத்தபோது அது ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. தற்போது இதனை பென் வீட்லே (Ben Wheatley) இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த பணக்காரரான மேக்ஸிம் டி வின்டரை திருமணம் செய்துகொள்கிறார் லில்லி ஜேம்ஸ். இதனையடுத்து தனது கணவரின் வீட்டில் அவரது முதல் மனைவியின் நிழல் அவரை பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் பின் நிகழும் பரபரப்பான சம்பவங்களே படத்தின் கதை.
தி டிஷ்கவரி (The Discovery)
டாக்டர் தாமஸ் ஹார்பர் என்ற விஞ்ஞானி மனிதனின் இறப்பிற்கு பின்னாலும் வாழ்க்கை இருப்பதாக கண்டறிந்து சொல்கிறார். இதனையடுத்து பலரும் தற்கொலை செய்யத் துவங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இந்த வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதாக தங்கவிடுகிறார்கள். அவர்களில் ஒருவனான ஹார்பரின் மகன் வில் மர்மமான இளம் பெண்ணான இஸ்லாவை சந்திக்கிறான். அதன் பிறகு வில்லின் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் மாற்றங்களே படத்தின் கதை.
ஆல் குட் திங்ஸ் (All Good Things)
தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக நினைக்கும் ஹீரோ, கேட்டி என்ற பெண்ணை சந்திக்கிறாள். இருவரும் சேந்து திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார்கள். ஆனால் ஹீரோவின் குடும்பத்திலிருந்து எதிர்ப்பு மற்றும் வெளி உலகில் இருந்து வரும் தீய சக்தி இவர்களுக்கு தடையாக இருக்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை படத்தின் கதை.
தி அட்ஜெஸ்ட்மென்ட் பிரோ (The Adjustment Bureau)
தேர்தலில் தோல்வியுறும் அரசியல்வாதியான டேவிட் நோரிஸ் தன் உரையை தயாரிக்கும் நேரத்தில் ஒரு பெண்ணை சந்திக்க நேர்கிறது. முதல் பார்வையிலேயே அந்த பெண்ணை அவருக்கு பிடித்துப்போகிறது. ஆனால் அந்த பெண்ணின் விவரங்கள் தெரியவில்லை. இந்த நிலையில் ஒரு மர்மமான ஒன்று இருவரையும் இணைய விடாமல் தவிர்ப்பதாக அவருக்கு தோன்றுகிறது. அதனை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை படத்தின் கதை.