Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமேசான் பிரைமில் டாப் 10 காமெடி படங்கள் ! உங்க சாய்ஸ் எது?

Amazon Prime: மேசான் பிரைமில் உள்ள உலக ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்ற சிறந்த 10 காமெடி படங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில தமிழிலும் கிடைக்கின்றன. எல்லா படங்களுக்கும் ஆங்கில சப்டைட்டிலும் இருக்கிறது. இது உங்களது காட்சி அனுபவத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.

அமேசான் பிரைமில் டாப் 10 காமெடி படங்கள் ! உங்க சாய்ஸ் எது?
அமேசான் பிரைமில் சிறந்த 10 காமெடி படங்கள்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 24 Mar 2025 09:27 AM

பார்வையாளர்கள் எந்த வித மன நிலையில் இருந்தாலும் காமெடி படங்கள் (Comedy Movies) அவர்களின் மன நிலையை மாற்றும் வல்லமை படைத்தது. அதனால் தான் உலக அளவில் காமெடி படங்களுக்கு என எப்பொழுதுமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் காமெடி படங்களை எப்படி தேர்வு செய்வது அது எங்கே கிடைக்கும் என்பது தான் அதிலிருக்கும் சவால். இங்கே அமேசான் பிரைமில் (Amazon Prime) உள்ள உலக ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்ற சிறந்த 10 காமெடி படங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில தமிழிலும் கிடைக்கின்றன. எல்லா படங்களுக்கும் ஆங்கில சப்டைட்டிலும் இருக்கிறது. இது உங்களது காட்சி அனுபவத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்.

அமெரிக்கன் பிக்சன் (American Fiction)

இயக்குநர் கோர்டு ஜெபர்சன் இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றார். ஜெஃப்ரி மோங்க் எல்லிசன் என்ற எழுத்தாளர் அவரது புத்தகங்களை விற்பனை செய்வதில் சவால்களை எதிர்கொள்கிறார். பின்னர் அவர் வாழ்க்கையின் மோசமான பக்கத்துக்கு செல்கிறார். கலைக்கும் வியாபாரத்துக்கும் இடையேயான போராட்டத்தை பேசுகிறது இந்தப் படம்.

தி பிக் சிக் (The Big Sick)

இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. குமைல் மற்றும் எமிலி இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலில் கலாச்சார வேற்றுமை உள்ளிட்ட காரணங்களால் சிக்கல்கள் எழுகின்றன. குடும்பத்தின் எதிர்ப்பு, கலாச்சார வேற்றுமை ஆகியவற்றை கடந்து இருவரும் இணைந்தார்களா என்பதே இந்தப் படத்தின் கதை.

பில் அண்ட் டெட்ஸ் எக்சலண்ட் அட்வென்சர் (Bill & Ted’s Excellent Adventure)

உயர்நிலை பள்ளி நண்பர்கள், பில் மற்றும் டெட், இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, ஒரு டைம் டிராவலரை கண்டுபிடிக்கின்றனர். அவருடன் இணைந்து காலத்தை கடந்து பயணிக்க முயல அதன் விளைவு என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் கதை.

தி பர்ட் கேஜ் (The Birdcage)

தன் பாலின ஈர்ப்பாளர்களான அர்மந்த் மற்றும் ஆல்பர் மியாமியில் ஒரு நைட் கிளப் நடத்துகிறார்கள். அர்மந்தின் மகன் ஒரு அரசியல்வாதியின் மகளுடன் திருமணம் செய்ய திட்டமிடுகிறான். இதற்காக, தனது தந்தையை தன் பாலின ஈர்ப்பை மறைக்கச் சொல்கிறான். அதன் பிறகு, அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களே இந்தப் படத்தின் கதை.

தி ஜெனரல் (The General )

அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்தில் நடக்கும் காமெடி திரைப்படமாகும். ரயில் பொறியாளரான ஜானி கிரே,ரயிலான தி ஜெனரலை யூனியன் படைகளால் திருடப்படுவதைக் கண்டுகொண்டு, அதனை மீட்டு தனது காதலியை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.

பாட்டம்ஸ் (Bottoms)

இரு உயர்நிலை பள்ளி மாணவிகளான பிஜே மற்றும் ஜோஸி, பெண்களுக்கான பைட் கிளப்பை ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் எதிர்பாராத காதல் மற்றும் பிரச்சனைகளுடன் சிக்கிக்கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்கள் என்பதே படத்தின் கதை.

போஃபிங்கர் (Bowfinger)

ஒரு சிறு பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளரான பாபி போஃபிங்கர், பிரபல நடிகரான கிட் ராம்சேவை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிடுகிறார். ஆனால், கிட் ராம்சேவுக்கு தெரியாமல், அவன் ஏலியன்களால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்று நம்புகிற வகையில் பாபி அந்த படத்தை உருவாக்குகிறார். பாபி போஃபிங்கரின் முயற்சி வெற்றியடைந்ததா என்பது தான் படத்தின் கதை.

பிரைட்ஸ்மெயிட்ஸ் (Bridesmaids)

ஆனி, தனது நெருங்கிய தோழி லிலியனின் திருமணத்தில் அவரது மணமகள் தோழியாக நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறாள். மற்ற மணப்பெண் தோழிகளுடன் அவளுக்கு போட்டி ஏற்படுகிறது. ஆனி, தன் எதிர் சவால்களை எதிர்கொண்டு, தனது உறவுகளையும் வாழ்க்கையையும் சமாளித்து, சிறந்த மணப்பெண் தோழியாக மாறுவது தான் படத்தின் கதை.

டோப் (Dope)

மோசமான பகுதியில் வாழும் ஒரு மாணவர் மால்காம், 90 களின் ஹிப் ஹாப் மீது ஆர்வமாக இருக்கிறார். ஒருநாள், ஒரு போதை வியாபாரியுடன் சந்திப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக குற்ற வழக்கில் சிக்கிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை.

ஃபார்கோ (Fargo)

ஜெரி லுண்டேகார்ட், தனது மனைவியை கடத்தி, அவரது பணக்கார அப்பாவிடமிருந்து பணம் பறிக்க முயல்கிறார். இந்த முயற்சியில் பல சிக்கல்களில் அவர் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதே இந்தப் படத்தின் கதை

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...