அமேசான் பிரைமில் டாப் 10 திரில்லர் படங்கள் – உங்கள் சாய்ஸ் எது?
Amazon Prime: விமர்சனங்களின் அடிப்படையில் அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் உள்ள சிறந்த 10 திரில்லர் படங்கள் இந்தப் பதிவில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் சில படங்கள் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை, ஒவ்வொரு படமும், அதன் நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள், மற்றும் விறுவிறுப்பாக படமாக்கிய விதம் என ரசிகர்களை மெய் மறக்க செய்யும் படங்களும் உள்ளன.

எந்த காலகட்டத்திலும் திரில்லர் (Thriller) படங்களுக்கு மட்டும் ரசிகர்களின் மனதில் தனி இடம் இருக்கும். திரில்லர், ஆக்சன் படங்கள், சயின்ஸ் பிக்சன் மற்றும் போர்த் திரைப்படங்கள் என, பல்வேறு விதமான ஜானர்கள் ஓடிடியில் (OTT) காண கிடைக்கின்றன. அவற்றில் விமர்சனங்களின் அடிப்படையில் அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் உள்ள சிறந்த 10 திரில்லர் படங்கள் இந்தப் பதிவில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதில் சில படங்கள் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை, ஒவ்வொரு படமும், அதன் நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள், மற்றும் விறுவிறுப்பாக படமாக்கிய விதம் என ரசிகர்களை மெய் மறக்க செய்யும் படங்களும் உள்ளன.
10 கிளாவர்ஃபீல்டு லேன் (10 Cloverfield Lane )
மிச்செல் என்ற பெண் ஒரு விபத்துக்குப் பிறகு கண் திறந்து பார்க்கிறாள். அப்போது சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். அவரிடம் ஹோவர்டு என்பவர் வெளி உலகம் விஷமாகிவிட்டது. அங்கு மனிதர்கள் வாழ முடியாது என்கிறார். மிச்செல் அவனது சொல்லில் சந்தேகமடைந்து, உண்மையை ஆராயத் தொடங்குகிறாள். காலத்திற்கும் சந்தேகத்திற்கும் இடையில் போராடி, வெளி உலகம் பற்றிய உண்மையை எப்படி கண்டறிகிறாள் என்பதை இந்தப் படத்தின் கதை.
பிஃபோர் தி டெவில் நோஸ் யூ ஆர் டெட் (Before the Devil Knows You’re Dead )
பணத்தாசை ஒரு குடும்பத்தை எப்படி அழிக்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை. தனது பண மோசடி வெளிச்சத்திற்கு வரும் அபாயத்தில் இருக்கும் ஹீரோ, பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் தம்பி ஹாங்குடன் இணைந்து தங்களது பெற்றோரின் நகைக்கடையை கொள்ளையடிக்க முயல்கிறார். ஆனால், அவர்கள் திட்டம் தவறாகிவிட, அவர்களின் தந்தை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
கேப்டன் பிலிப்ஸ் (Captain Phillips )
கடற்கொள்ளையர்களின் ஆபத்தான சூழ்நிலையில் இருந்து தனது குழுவை பாதுகாக்க பிலிப்ஸ் எடுக்கும் முடிவுகள் தான் இந்தப் படத்தின் கதை. டாம் ஹாங்க்ஸ் நடித்துள்ள இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கோஹரென்ஸ் ( Coherence (2013)
வானில் ஒரு வால் நட்சத்திரம் தோன்ற இரவு விருந்தில் கலகலப்பாக இருந்த நண்பர்கள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். அவர்கள் வீதியின் மறுபுறம் தங்களைப்போன்ற ஒரே மாதிரி நபர்களை கண்டுபிடிக்க அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
டை ஹார்டு (Die Hard )
ஜான் மெக்லேன் தனது பிரிந்திருக்கும் மனைவியுடன் மீண்டும் இணைவதற்காக லாஸ் ஏஞ்சலஸுக்கு செல்கிறார். ஆனால், அவர் சென்ற இடத்தில் ஜெர்மன் பயங்கரவாதிகள் மனைவி வசிக்கும் கட்டிடத்தை கைப்பற்றுகின்றனர். மெக்லேன் தனியாளாக அவர்களை எதிர்த்து போராடி, தனது மனைவியையும் மற்றவர்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை இந்தப் படத்தின் கதை.
டோனி டார்கோ (Donnie Darko)
டோனி (ஜேக் ஜில்லென்பால்) என்ற இளைஞன், தூங்கும்போது கனவில் விபரீதமான காட்சிகளை காண்கிறான். அவனுக்கு ஃபிராங்க் என்ற ஒரு பெரிய முயல் உருவம் தோன்றி, உலகம் விரைவில் அழியவிருப்பதாக கூறுகிறது. அதன் உறுதித் தன்மையை கண்டுபிடிக்க டேனி முயல அதன் பிறகு நடப்பவையே இந்தப் படத்தின் கதை.
தி ஹேண்ட்மெய்டன் (The Handmaiden)
சுகி என்பது ஒரு ஏழை இளம்பெண், பணக்காரரான ஹிடகோவின் குடும்பத்தில் உதவியாளராக வேலை செய்ய அனுப்பப்படுகிறாள். ஆனால் உண்மையில், அவள் ஒரு மோசடிக் குழுவின் உறுப்பினர், ஹிடேகோவின் செல்வத்தை கொள்ளையடிக்க ஒரு காதலன் மூலம் அவரை மயக்கி அவரை திருமணம் செய்துகொள்வதே அவர்களின் திட்டம். ஆனால், எதிர்பாராத வகையில், சுகிக்கு ஹிடேகோவுடன் உண்மையான காதல் உருவாக அதன் பிறகு நடப்பவையே இந்தப் படத்தின் கதை.
தி ஹிட்ச்-ஹைகர் (The Hitch-Hiker )
ராய் மற்றும் கில்பர்ட் கலிபோர்னியாவில் காரில் பயணிக்கும்போது, தெரியாமல் ஒரு மோசமான பயணியான, எம்மெட் மயர்ஸை ஏற்றிக் கொள்கிறார்கள். மயர்ஸ் போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி, அவன் தப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த இருவரையும் துப்பாக்கியால் மிரட்டி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்துகிறான். அதன் பிறகு என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் கதை.
தி ஹர்ட் லாக்கர் (The Hurt Locker)
ஈராக் போரின் போது, ப்ராவோ கம்பெனியில் புதிய வெடிகுண்டு நீக்க குழுவின் தலைவர் ஆக ஸ்டாஃப் சார்ஜெண்ட் ஜேம்ஸ் வருகிறார். அவர் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்வதில் மிகுந்த திறமை கொண்டவர், ஆனால் தனது நடவடிக்கைகளை மற்றவர்களிடம் கூறாமல் தனியாக செயல்படுவார்.அவரின் அபாயகரமான நடவடிக்கை, குழுவில் உள்ள மற்ற வீரர்களுடன் முரண்பாடுகளை உருவாக்குகிறது, குறிப்பாக சார்ஜெண்ட் சான்போர்னுடன் பிரச்னை ஏற்படுகிறது. போரின் மத்தியில், வாழ்க்கையும் மரணமும் ஒரே நொடியில் மாறும் சூழலில், அவர்கள் உறவுகளை, பயங்களை, மற்றும் போரின் உளவியல் தாக்கங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
எல்.ஏ.கான்ஃபிடன்சியல் (L.A. Confidential)
1950 களின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊழல் மற்றும் குற்றச்செயல்களில் பெருகிவருகிறது. இந்த நிலையில் ஒரு காஃபி ஷாப்பில் நிகழ்ந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கை விசாரிக்க மூன்று வேறு விதமான காவல்துறை அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களது விசாரணையில் நகரின் அதிகாரிகள், குற்றவாளிகள் இணைந்து செய்யும் ஒரு பெரிய சதி வெளிச்சத்துக்கு வருகிறது. அதனை அவர்கள் எவ்வாறு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.