ஒரே காட்சியில் 4 கமல் – ‘மைக்கேல் மதன காம ராஜன்’ பட டெக்னிக் என்ன தெரியுமா?
Kamal Haasan: பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், கமலிடம் மைக்கேல் மதன காமராஜன் படத்தை எப்படி உருவாக்கினீர்கள் என கேட்க அதற்கு கமல், விரைவில் அதற்கு பதில் சொலகிறேன். உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என எனக்கு தெரியாது. எனக்கு கற்றுக்கொள்வதற்கு பயனுள்ள படமாக இருந்தது. என்று குறிப்பிட்டார்.

கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) – இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் கூட்டணி என்றாலே அந்தப் படத்தில் பரீட்சார்ந்த முயற்சிகள் கொண்ட படமாக இருக்கும். இருவரும் முதன் முதலாக இணைந்த ‘ராஜபார்வை’ (Raja Paarvai) படத்தில் கமல் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார். இருவரும் இரண்டாவதாக இணைந்த பேசும் படம். இந்திய சினிமா பேச ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு பிறகு வந்த பேசாத படம். இப்படி இவர்களின் வித்தியாசமான முயற்சிகளின் உட்சகட்டமாக அமைந்த படம் அபூர்வ சகோதரர்கள் (Apoorva Sagodharargal). அப்பாவை கொன்றவர்களை உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு மகன்கள் எப்படி பழிதீர்த்தார்கள் என்ற வழக்கமான கமர்ஷியல் கதை. ஆனால் அதில் வித்தியாசம் என்ன வென்றால் இரண்டு மகன்களில் ஒருவர் 3 அடி உயரமே உள்ளவர். சிஜி அனிமேஷன் என வசதிகளும் இல்லாத 90களில் உயரம் குறைவான மனிதராக எப்படி நடித்தார். என்பதே இன்றுவரை பலருக்கும் ஆச்சரியமானதாக இருந்துவருகிறது.
அதற்கு கமலின் அசாத்தியமான உழைப்பு ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் சிங்கீதம் சீனிவாச ராவ். தெலுங்கு இயக்குநர் கே.வி.ரெட்டியிடம் ‘மாயா பஜார்’ போன்ற படங்களில் இணை இயக்குநராக பாணியாற்றினார். மாயாஜால காட்சிகளை உருவாக்குவதில் உள்ள கேமரா டெக்னிக்கை பயன்படுத்துவதில் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அவரது மேற்பார்வையில் கேமரா கோணங்கள் பாதி, கமலின் உழைப்பு பாதி என உயரம் குறைவான அப்புவாக திரையில் தோன்றியிருப்பார். இருவரும் அடுத்த படத்தில் இன்னொரு அசாத்திய முயற்சியை கையிலெடுத்தனர். அது ஒரு படத்தில் 4 கமல். பொதுவாக ஒரு ஹீரோ ஒன்றுக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும்போது அதனை வித்தியாசப்படுத்திக் காட்ட இருவரையும் வேறு வேறு கெட்டப்புடன் படமாக்குவர். இந்தப் படத்தில் நான்கு கமல்களும் துவக்கத்தில் வேறு வேறு கெட்டப்புகளில் இருந்தாலும் ஆள் மாறட்டத்துக்காக ஒரே தோற்றத்துக்கு மாறுவார்கள். இதில் சவால் என்னவென்றால் பெரும்பாலான காட்சிகளில் குறைந்தது இரண்டு கமலாவது இருப்பர். 4 ரோல்களிலும் வித்தியாசமான பாடி லாங்குவேஜ் டயலாக் டெலிவரி என வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பார் கமல் படத்தின் கடைசி 20 நிமிடங்களில் 4 கமலும் இருப்பர்.
பேர் வச்சாலும் பாடலின் இறுதியில் மைக்கேல் கமல் மதனை கட்டையால் அடிப்பார் அப்போது மதன் கீழே மயங்கி விழுவார். இந்த காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும். அதே போல மைக்கேல் மற்றும் மதன் இருவரும் எதிரே எதிரே நின்று பேசிக்கொண்டிருப்பர். அப்போது மைக்கேல் பின்னணியில் உள்ள கண்ணாடியில் கமலின் பிம்பம் விழுந்திருக்கும். இப்படி படத்தில் ஆச்சரியப்படும் காட்சிகள் நிறைய இருக்கின்றன. இப்போது குரோமா கீ கம்போஸிட்டிங் (Chroma Key Compositing) போன்ற டெக்னிக்குகள் மூலம் படமாக்குவர். ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் எதுவும் இள்லாத அன்றைய காலகட்டத்தில் அவற்றை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்ற ஆச்சரியம் இன்றளவும் பலருக்கு இருந்துவருகிறது.
பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், கமலிடம் மைக்கேல் மதன காமராஜன் படத்தை எப்படி உருவாக்கினீர்கள் என கேட்க அதற்கு கமல், விரைவில் அதற்கு பதில் சொலகிறேன். உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என எனக்கு தெரியாது. எனக்கு கற்றுக்கொள்வதற்கு பயனுள்ள படமாக இருந்தது. என்று குறிப்பிட்டார்.
மல்டிபிள் எக்ஸ்போசர் (Multiple Exposure)
ஒரே ஃபிரேமில் ஒன்றுக்கு மேற்பட்ட கமல் தோன்றும் காட்சிகளில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு கதாப்பாத்திரத்தில் கமல் நடித்து அது படமாக்கப்பட்டு இணைக்கப்படும். ஒரே பிரேமில் மீண்டும் மீண்டும் பதிவு செய்து, அவற்றை ஒரே ஃப்ரேமில் ஒருங்கிணைப்பதுதான் இந்த மல்டிபிள் எக்ஸ்போசர்.
ஸ்பிளிட் ஸ்கிரீன் (Split Screen):
இரண்டு விதமான காட்சிகளை படமாக்கி அதனை ஒன்றாக இணைப்பது. மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் இரண்டு கமல் பேசும் காட்சியில் இரண்டையும் தனித் தனியாக படம் பிடித்து பிறகு எடிட்டிங்கில் இணைப்பர். பல படங்களில் இருவர் வேறு வேறு இடங்களில் போன் பேசுவதை ஒரே பிரேமில் காட்ட இந்த டெக்னிக்கை பயன்படுத்துவர்.
பாடி டபுள்ஸ் (Body Doubles):
சில காட்சிகளில், கமல் ஹாசனுக்காக அவரைப் போன்ற தோற்றம் கொண்டவர்களைப் பயன்படுத்துவது. குறிப்பாக ஒரு கமல் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு கமலுக்கு பின்னால் இருந்து ஷாட் வைக்கப்பட்டிருந்தால் அப்போது இந்த பாடி டபுள் பயன்படுத்தப்படும்.