Cinema Rewind: சிவாஜி பட ஷூட்டிங்கில் விவேக்கை நெகிழ வைத்த ரஜினிகாந்த்!
Vivek About Acting With Rajinikanth : தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து, பலவிதமான சமூக சேவைகளைப் புரிந்து மாமனிதர் விவேக். இவரின் நடிப்பில் வெளியான படங்களில் கருத்து இல்லாமல் இருக்காது. அவ்வாறு பிரபலமானவர் தற்போது இந்த உலகத்தில் இல்லை. இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்த அனுபவத்தைப் பற்றிப் பேசியிருந்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.

நடிகர் விவேக் (Vivek ) தமிழ் சினிமாவின் வரம் என்றே கூறலாம். சமூகப் பொறுப்பு (Social worker) , மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு என முற்றிலும் மாறுபட்ட மனிதர் ஆவார். இவர் கதாநாயகனாகவும், காமெடியனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் கே. பாலச்சந்தரின் (K. Balachander) மனதில் உறுதி வேண்டும் (Manathil Uruthi Vendum) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். கடந்த 1987ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து விவேக் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் முக்கிய தோற்றத்தில் நடிக்க ஆரம்பித்தார். புது புது அர்த்தங்கள், ஒரு வீடி இரு வாசல், ஆரத்தி எடுங்க, கேளடி கண்மணி மற்றும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். 80ஸ் முதல் 2000ம் ஆண்டு தொடக்கம் வரை பல்வேறு படங்களில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மக்களால் சின்ன கலைவாணர் என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டு உடல் நல குறைவால் காலமானார். அவர் காலமானாலும் அவரின் திரைப்படங்கள் இன்றுவரையிலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் தமிழில் இறுதியாக அரண்மனை 3 மற்றும் தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இவர் இறந்த பின் தான் அரண்மனை 3 படம் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்தில் AI உதவியுடன் இவரின் கதாபாத்திரம் கொண்டுவரப்பட்டது. இவர் முன்னதாக சிவாஜி படத்தில் நடித்ததை குறித்துப் பேசியிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விவேக் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) உழைப்பு, எளிமையும் குறித்துப் பேசியிருந்தார்.
நடிகர் விவேக் ரஜினியைப் பற்றிப் பேசிய விஷயம் :
முன்னதை பேசிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விவேக் “சிவாஜி படத்தில் முதல் நாள் முதல் காட்சியில் நடித்தபோது , ஷங்கர் சார் அமைதியாக இருந்தார். பின் அவர் எங்களிடம் சார் ஒன்ஸ்மோர் என்று அவர் கேட்டார். அதற்கு நடிகர் ரஜினி சார் என்னிடம் “ஏன் ஒன்ஸ்மோர் , எதற்கு ஒன்ஸ்மோர் கேட்கிறார்? என்று என்னிடம் பேசினார். நான் ஷங்கர் சாரை போல அமைதியாக இருந்தேன். ரஜினி சார் என்னிடம் “எப்போதுமே இப்படிதானா?” என்று கேட்டார்.
அதற்கு நான் ஆமா எப்போதுமே இப்படிதான் என்று கூறினேன். நடிகர் ரஜினி சார் அன்றுக் கேட்டதோடு சரி, சிவாஜி படம் முடிகிற வரைக்கும் ஷங்கர் சார் எது சொன்னாலும் ரஜினி சார் மறுத்துப் பேசமாட்டார், எதனை முறை நடிக்கச் சொன்னாலும் ரஜினி சார் தயங்காமல் நடித்தார் எந்த பந்தாவும் அவருக்கு கிடையாது.
அதைப் போல லோனாவாலா என்ற இடத்தில் ரயில் வரும் காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம், அப்போது மதியம் 2 முதல் 3 மணிவரை உச்சி வெயிலில் ரயில்வே டிராக்கில் உட்காந்திருந்தோம். ரஜினி சார் சாப்பிடக் கூட இல்லை, வளரும் நடிகர்கள் மற்றும் இளம் ஹீரோக்கள் எல்லாரும் கத்துக்கவேண்டிய விஷயம் இது. சூப்பர் ஸ்டாரின் எளிமை, அவரின் பண்பு மற்றும் வேலையில் அவர் எடுக்கும் டெடிகேஷனை கண்டிப்பாக நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.