Ajith Kumar : கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்.. அவருக்கு என்ன ஆச்சு?

Ajiths Car Accident In Europe : நடிகர் அஜித் குமார் இதுவரை இந்தியா சார்பாக 2 முறை கார் ரேஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியான நிலையில், தனது கார் ரேஸ் பந்தயத்தில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், தற்போது ஜிடி4 யூரோப்பியன் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார். அந்த ரேஸில் அஜித்தின் கார் விபத்தியில் சிக்கிய வீடியோ தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar : கார் ரேஸ் பந்தயம்.. மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார்.. அவருக்கு என்ன ஆச்சு?

நடிகர் அஜித் குமார்

Published: 

19 Apr 2025 13:06 PM

தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகனாகக் கலக்கி வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் (Car race) போட்டிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும் இவர் இதுவரை துபாய் மற்றும் இத்தாலியில்  (Dubai and Italy) நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்துகொண்டு 3வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த 2 போட்டிகளிலும் 3வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். இந்த போட்டிகளின் வெற்றியைத் தொடர்ந்தது தற்போது யூரோப்பில் (Europe)  நடந்துவரும் ஜிடி4 யூரோப்பியன் கார் ரேஸ் சீரிஸில் (GT4 in the European Series) கலந்துகொண்டுள்ளார். இந்த போட்டிகளில் பயிற்சி பெற்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் மக்ளில்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து இன்று 2025, ஏப்ரல் 19ம் தேதியில், தொடர்ந்து 12 மணி நேரமாகப் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு முன்பு இந்த போட்டிக்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அவரின் காரின் முன் பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மேலும் நடிகர் அஜித் குமாருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்தைக் கூட பொருட்படுத்தாமல் நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார். சுமார் 12 மணிநேரமாக நடந்து வரும் இப்போட்டியில் அஜித்துடன் 3 வீரர்கள் மாறி மாறி காரை ஒட்டி வருகின்றனர்.

அஜித் கார் விபத்து வீடியோ :

தற்போது இணையத்தில் வைரலாகிவரும் இந்த வீடியோவின் கீழ் பல அஜித் ரசிகர்கள் தங்களின் வருத்தத்தையும், அஜித்தின் உத்வேகத்தையும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் விபத்து ஈடுபடுவது இது முதல் முறை அல்ல, இதுவரை 3 முறைக்கும் மேலாக கார் ரேஸ் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்திற்குப் பத்மபூஷன் விருது ;

சினிமாவையும் கடந்தது கார் ரேசில் கலக்கிவரும் அஜித் குமாருக்கு, இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது. இதுவரை இந்தியாவின் சார்பாக இரு முறை கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இந்திய அரசு பத்ம பூஷன் விருதை வழங்கவுள்ளது. இந்த விருந்தானது 2025 குடியரசு விழாவை முன்னிட்டு, இந்த 2025, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார் எனச் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.