ஹாட்ஸ்டாரில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 சிறந்த மலையாள கிரைம் திரில்லர் படங்களின் லிஸ்ட் இதோ
Watch To Watch: உங்களுக்கு க்ரைம் த்ரில்லர் படங்கள் பார்க்க பிடிக்கும் என்றால் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சிறந்த 5 படங்களின் தொகுப்பை பார்க்கலாம். அதில் மலையாளத்தின் முன்னணி நடிகர்களான நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா நசீம் ஆகியோரின் படங்களும் அடங்கும்,

படங்கள்
சினிமாவில் பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு ஃபேமிலி செண்டிமெண்ட் பிடிக்கும். சிலருக்கு காதல் படங்கள், சிலருக்கு ஆக்ஷன் படங்கள், சிலருக்கு கிரைம் படங்கள், சிலருக்கு த்ரில்லர் படங்களு. சிலருக்கு ஹாரர் படங்களும் பிடிக்கும். ஓடிடியின் வருகைக்கு பிறகு பல மொழிகளிலும் உள்ள படங்கள் மிகவும் சுலபமாக மக்களின் பார்வைக்கு கிடைக்கின்றது. அந்த வகையில் சிலருக்கு சில ஜானர்கள் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அப்படி ஓடிடியில் ஒவ்வொரு ஜானர்களுக்கும் பார்வைகள் வேறுபடும். அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த முன்னணி நடிகர்களின் க்ரைம் த்ரில்லர் படங்கள் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானவற்றில் பார்க்க வேண்டிய 5 படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
L2: எம்புரான்: பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான L2: எம்புரான் என்பது பிரபலமான மலையாள க்ரைம் திரில்லர் படமாகும், இது ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாகும். மேலும் இது பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான சாதனையைப் படைத்தது.
சூக்ஷ்மதர்ஷினி: மலையாளத்தில் பிரபலமான திரில்லர் படமாக சூக்ஷ்மதர்ஷினி உருவானது. இந்தப் படத்தில் நடிகர்கள் நஸ்ரியா நசீம் மற்றும் பேசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ரசிகர்களிடம் இருந்து விமர்சன ரீதியாக பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
கிங் ஆஃப் கோதா: க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்த மற்றொரு பிரபலமான படமான, கிங் ஆஃப் கோதா, ரசிகர்களை குற்றங்கள் நிறைந்த நகரத்திற்கு அழைத்துச் செல்கிறது. இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரசன்னா, கோகுல் சுரேஷ், நைலா உஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கேங்ஸ்டர்களின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.
ரோர்சாக்: பழிவாங்கலை அடிப்படையாக வைத்து உருவான ஒரு த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டது ரோர்சாக். இந்தப் படத்தை இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியிருந்தார். நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஆசிப் அலி, பிந்து பணிக்கர், ஷராபுதீன், ஜெகதீஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கின்றது.
கண்ணூர் ஸ்குவாட்: நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான மற்றொரு படமான கண்ணூர் ஸ்குவாட் படம் கிரைம் த்ரில்லர் பாணியின் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து அஸீஸ் நெடுமங்காட், ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, கிஷோர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கின்றது.