டிஆர்பியில் சரசரவென முன்னேறிய விஜய் டிவி சீரியல்… டாப் 10 லிஸ்ட் இதோ
தமிழகத்தில் மெகா சீரியல்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் பலர் லட்சக்கணக்கில் இருப்பதைப் போலவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

சிறகடிக்க ஆசை
தமிழ் சினிமாவில்படங்கள் வார வாரம்வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்ததா இல்லையா என்று செய்திகள் வெளியாகி வருகின்றது. அதே போல தொலைக்காட்சி சீரியல்களிலும் வார வாரம் டிஆர்பியில் டாப் 10 இடங்களும் வெளியிட்டு வருகின்றது. முன்பு எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் சீரியல் பார்க்கிறார்கள் என்பதைத் தாண்டி தற்போது சிறுசு முதல் பெருசு வரை சீரியல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்களது வீட்டில் ஒருவராக பாவிக்கும் அளவிற்கு தமிழ் ரசிகர்களிடையே சீரியல் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டும் இன்றி சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் நெறுக்கமானவர்களைப் போல அவர்கள் மீது அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் டிஆர்பியில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒளிபரப்பான சிறிது நாட்களிலேயே இந்த சீரியல் டிஆர்பியில் இடம் பிடித்தது. நான்கு அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதே வேலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மற்றும் சின்ன மருகள் ஆகிய இரண்டு சீரியல்கள் 9 மற்றும் 8-ம் இடங்களைப் பிடித்தது. தொடர்ந்து பல நாட்களாக டிஆர்பியில் இடம் பிடிக்க தவறிய சின்ன மருமகள் சீரியல் இந்த வாரம் இடம் பிடித்துள்ளது.
மேலும், சன் டிவியில் ரசிகர்களின் ஃபேஃபரட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து 7-வது இடத்தைப் பிடித்து வருகிறது. பெண்களின் அடிப்படை சுதந்திரம் குறித்து பேசும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிமாகவே உள்ளது. அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கிய அன்னம் சீரியல் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் 5-வது இடத்திலும் முறையே சன் டிவி சீரியல் தான் இடம் பிடித்துள்ளது. அதன்படி மருமகள் சீரியல் தான் தனது 5-வது இடத்தை தக்க வைத்துள்ளது. தொடர்ந்து 5 இடங்களுக்குள் முன்னேற விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் போராடி வந்த நிலையில் இந்த வாரம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தவிற இளைஞர்கள் வரை பலதரப்பட்டவர்களுக்கு இந்த சீரியல் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால் முதல் மூன்று இடங்களை மட்டும் சன் டிவி எப்போது மற்ற சேனல்களுக்கு விட்டுக் கொடுப்பதே இல்லை.
அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் 3-வது இடத்தையும், மூன்று முடிச்சு சீரியல் 2-வது இடத்தையும், சிங்கப்பெண்ணே சீரியல் முதல் இடத்தையும் தக்க வைத்துள்ளது.