தமிழ் சினிமாவில் சிறந்த காதல் படங்களின் லிஸ்ட் – உங்க பேவரைட் எது?
குறிப்பாக 90 களில் பார்க்காமல் காதல், சொல்லாமல் காதல், முக்கோனக் காதல், ஒரு தலைக்காதல், காதலுக்கு உயிரை தியாகம் செய்வது, நாக்கை அறுத்துக்கொள்வது என விதவிதமான காதல் படங்களை பார்த்திருக்கிறோம். கடந்த சில வருடங்களாக அந்தப் போக்கு மெல்ல மாறி வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டடாடடப்பட்ட படங்ககளை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்கள்
காதல் இல்லாமல் தமிழ் சினிமா (Tamil Cinema) இல்லை. தமிழ் திரையுலகம் காதலைக் கொண்டாடியிருக்கும் அளவுக்கு வேறு எந்த திரையுலகமும் கொண்டாடியிருக்குமா என்பது சந்தேகம் தான். எந்த வகை ஜானர் படங்களாக இருந்தாலும் காதல் இல்லாமல் இருக்காது. காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, காதலே நிம்மதி, காதலன்(Kadhalan), காதல் பரிசு, காலமெல்லாம் காதல் வாழ்க, காத்திருந்த காதல், காதலுடன், என்றென்றும் காதல், காதலர் தினம் இப்படி தலைப்புகளிலேயே காதலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. குறிப்பாக 90 களில் பார்க்காமல் காதல், சொல்லாமல் காதல், முக்கோனக் காதல், ஒரு தலைக்காதல், காதலுக்கு உயிரை தியாகம் செய்வது, நாக்கை அறுத்துக்கொள்வது என விதவிதமான காதல் படங்களை பார்த்திருக்கிறோம். கடந்த சில வருடங்களாக அந்தப் போக்கு மெல்ல மாறி வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டடாடடப்பட்ட படங்ககளை பார்க்கலாம்.
மூன்றாம் பிறை (Moondram Pirai)
எதிர்பாராத விதமாக தன்னிடம் வரும் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது இளைஞனுக்கு ஏற்படும் காதல் தான் இந்தப் படத்தின் கதை. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது. கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இளையராஜாவின் பாடல்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது. ஹிந்தியில் கமல் – ஸ்ரீதேவி நடிப்பில் சத்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் இந்தப் படம் வெற்றிபெற்றது. ஹிந்தியில் ஸ்ரீதேவிக்கு மார்க்கெட் உருவாக இந்தப் படம் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌனராகம் (Mouna Ragam)
காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் வற்புறுத்தலால் திருணம் செய்துகொள்கிறார். அவர் தனது திருமண வாழ்க்கையில் கணவரை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் மனப்போராட்டமே இந்தப் படம். மணிரத்னம் இயக்கத்தில் மோகன், கார்த்திக், ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கார்த்திக் குறைந்த நேரமே வந்தாலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்களை எடுத்தால் அதில் மௌன ராகத்தை தவிர்க்க முடியாது.
ரோஜா (Roja)
தீவிரவாதிகள் கடத்தப்பட்ட தனது கணவனை மீட்க மனைவி மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் கதை. மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்த இந்தப் படத்தின் மூலம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்போதே இந்தப் படம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ரஹ்மான் பெற்றார்.
காதலுக்கு மரியாதை (Kadhaluku Mariyadhai)
இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த ஜீவாவும் மினியும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். தங்கள் இரு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. மலையாள ரீமேக்காக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருப்பார் பாசில். இளையராஜாவின் பாடல்களும் கைகொடுக்க விஜய் கேரியரில் மிகப்பெரிய வெற்றப் படங்களில் ஒன்றாக மாறியது.
காதல்கோட்டை (Kadhal Kottai)
வேலை தேடி சென்னை வரும் கமலி ரயிலில் பேக்கை தவற விட அது சூர்யாவின் கைகளில் கிடைக்கிறது. சூர்யா பேக்குடன் லெட்டரையும் கமலிக்கு அனுப்ப இருவரும் கடிதங்கள் வழியாக காதலை பரிமாறிக்கொள்கிறார்கள். பார்க்காமலே காதல் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி யதார்த்தமான காட்சிகளால் ரசிக்கும்படி சொல்லியிருப்பார் அகத்தியன். அதனால் தான் அவருக்கு இந்தப் படத்துக்காக சிறந்த இயக்குநர் என்ற பிரிவில் தேசிய விருது கிடைத்தது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ் இயக்குநர் அகத்தியன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யாவாக அஜித்தும், கமலியாக தேவயானியும் நடித்திருந்தனர்.
சேது (Sethu)
அபிதாவை தீவிரமாக காதலிக்கும் சேதுவுக்கு எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் தலையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். அதன் பிறகு அவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இந்தப் படத்தின் கதை. பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா நடித்த படம். இளையராஜா இசையமைத்திருந்தார்.
குஷி (Kushi)
தமிழ் சினிமாவில் பெற்றோர்,சாதி, மதம் என காதலுக்கு வில்லனாக பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம். முதன் முதலில் காதலுக்கு வில்லனாக ஈகோ அவர்களை சேர விடாமல் தடுக்க அதனை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. சிம்பிளான ஒன் லைனை வைத்து மிகவும் சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில் விஜய், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர் தோல்விகளில் இருந்த விஜய்க்கு நம்பிக்கை கொடுத்த படம்.
காதல் (Kadhal)
பணக்கார பெண்ணும் ஏழை மெக்கானிக்கும் காதலிக்க அவர்கள் வீட்டில் எதிர்ப்பு கிளம்புகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு ஓடிப்போக பின்னர் அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை. மதுரை பின்னணியில் மிகவும் யதார்த்தமான காதல் கதையை படமாக்கியிருந்தார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்த இந்தப் படத்தில் பரத், சந்தியா நடித்திருந்தனர்.
விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa)
இயக்குநராக முயற்சிக்கும் இளைஞருக்கும் அவரது வீட்டின் மாடியில் வசிக்கும் கிறிஸ்துவ பெண்ணுக்கும் காதலில் விழ அதன் பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களே இந்தப் படம். இந்தப் படம் கிட்டத்தட்ட சென்னையில் ஒரு திரையிரங்கில் ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்ற வீதம் 3 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சிம்பு, திரிஷா நடித்திருந்தனர்.
96
பள்ளி பருவ காதலர்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீயூனியனில் சந்தித்துக்கொள்ள அன்று ஒரு நாள் இரவில் அவர்கள் எதிர்கொள்ளும் மனப்போராட்டமே படத்தின் கதை.