நெட்ஃபிளிக்ஸில் டாப் 10 கொரியன் சீரிஸ் – உங்க சாய்ஸ் எது?
நமது மலையாளம் (Malayalam) சினிமாக்களை போலவே தனித்துவமாக கதை சொல்லும் விதம், உணர்ச்சிகரமான காட்சிகள், இதயத்தை உருக்கும் காதல் கதைகள், துவக்கம் முதல் பரபரப்பை ஏற்படுத்தும் அதிரடித் திரில்லர்கள் என கொரிய தொடர்கள் (Korean Series) அனைத்து வகை பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சிறந்த கொரியன் சீரிஸ்
கொரியன் (Korean) படங்களாக இருக்கட்டும் கொரியன் சீரிஸாக இருக்கட்டும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மெய்மறக்க செய்வதற்கு காரணம். நமது மலையாளம் (Malayalam) சினிமாக்களை போலவே தனித்துவமாக கதை சொல்லும் விதம், உணர்ச்சிகரமான காட்சிகள், இதயத்தை உருக்கும் காதல் கதைகள், துவக்கம் முதல் பரபரப்பை ஏற்படுத்தும் அதிரடித் திரில்லர்கள் என கொரிய தொடர்கள் (Korean Series) அனைத்து வகை பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எப்பொழுதுமே புதுமையான கதைகளை தேடித் தேடி ரசிக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நெட்ஃபிளிக்ஸில் ஏராளமான கொரியன் சீரிஸ்கள் இடம் பிடித்திருக்கின்றன. அவற்றில் ரேட்டிங் அடிப்படையில் சிறந்த 10 சீரிஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்குயிட் கேம் (Squid game)
கடனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மர்மமான போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். குழந்தைகள் விளையாடும் அளவுக்கு எளிய போட்டியாக தெரிந்தாலும் அதில் தோற்பவர்களின் உயிர் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. வெற்றிபெறுவபர்களுக்கு ரூ.4000 கோடி பரிசாக வழங்கப்படும். இந்தப் பணத்தை பெற அவர்கள் கொடூரமான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் அவர்கள் எப்படி அந்த சூழ்நிலையை எதிர்கொண்டார்கள் என்பதே இதன் கதை.
இட்ஸ் ஓகே நாட் டு பி ஓகே (It’s Okay to Not Be Okay)
மனநல மருத்துவமனையில் நர்ஸாக இருக்கும் மூன் காங்-டே, ஆட்டிசம் குறைபாடுள்ள தனது சகோதரரையும் கவனித்துக்கொள்கிறார். யாருடனும் பழக விரும்பாத காங்-டே மீது, பிரபல எழுத்தாளரான கோ மூன்-யங் காதல் கொள்கிறார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இதன் கதை.
சம்திங் இன் தி ரெயின் (Something in the Rain)
வெளிநாட்டில் சில ஆண்டுகள் வேலை பார்த்து ஊர் திரும்பும் ஜுன்-ஹுய்க்கும் (Jung Hae-in), அவரது சகோதரியின் நண்பர் ஏ-ஜின்னுக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஏ-ஜின்னை விட ஜுன் ஹு 6 வயது பெரியவர். இது கொரியாவில் ஏற்றுக்கொள்ளப் படாத ஒன்று. மேலும், ஜுன்-ஹுக்கு பெற்றோர் இல்லை. எனவே அந்த ஊரில் இவரை திருமணத்திற்கு பொருத்தமானவராகக் கருத மாட்டார்கள். இருவரும் சமூக அழுத்தங்களை எதிர்கொண்டு எப்படி காதலில் வெல்கிறார்கள் என்பதே கதை.
அல்கெமி ஆஃப் சோல் (Alchemy of Souls)
இது மாயாஜாலங்கள் நிறைந்த ஒரு காதல் கதை.இந்தக் கதையில் நக்-சுவுக்கும் ஜாங் உக்குக்கும் இடையிலான காதல் கதைதான் இதன் முக்கிய அம்சம். அவர்கள் உடல்களைக் கடந்து, மரணத்தை வெல்கிறார்கள் என்பதே இதன் கதை.
பிசினஸ் புரோபொசல் (Business Proposal)
ஷின் ஹா-ரி பிளைண்ட டேட் செல்ல அங்கு தான் பணியாற்றும் நிறுவனத்தின் சிஇஓ கங் டே-மூவை சந்திக்கிறாள். இந்த நிலையில் அவளைத் தன் வருங்கால மனைவியாக நடிக்கச் சொல்லிப் பணம் தருவதாக டே-மூ கூறுகிறான். ஹா-ரிக்குக் குடும்பக் கஷ்டங்களுக்குப் பணம் கிடைக்கும் என்பதால் சம்மதிக்கிறாள். இதனையடுத்து இருவரும் உண்மையாகவே காதலிக்கத் தொடங்க பின்னர் என்ன ஆனதே என்பதே இதன் கதை.
சிண்ட்ரெல்லா அண்ட் தி ஃபோர் நைட்ஸ் (Cinderella and the Four Knights)
இது கிளாசிக் தேவதை கதையான சிண்ட்ரெல்லாவின் புதிய வடிவம். ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி, தான் ஆசிரியையாக வேண்டும் என்று கனவு காண்கிறாள், ஆனால் அவளுடைய சித்தி அவளது கனவுகளை சிதைக்கிறாள். எதிர்பாராத விதமாக, ஒருவர் அவருடைய மூன்று பேரப்பிள்ளைகளையும் ஒழுக்கமாக வளர்ப்பதற்காக அந்த பெண்ணை பணியமர்த்த அதன் பிறகும் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
தி டிரங்க் (The Trunk )
நோ இன்-ஜி காண்டிராக்ட் மேரேஜ் கம்பெனியில் வேலை செய்கிறாள். அப்போது அவரை ஒரு பணக்கார இசையமைப்பாளரான ஹன் ஜோஹ் வோனை ஒரு வருடத்துக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவரது மனைவியால் ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒரு வருடத்தில் இருவரது வலி நிறைந்த கடந்த காலங்களை பேசி தெரிந்துகொள்கிறார்கள். இருவருக்கும் நெருக்கம் உருவாகிறது. ஆனால் காண்டிராக்ட் முடிவுக்கு வரும் நேரத்தில் இருவரும் என்ன முடிவு செய்வார்கள் என்பதே இதன் கதை.
கிராஸ் கோர்ஸ் இன் ரொமான்ஸ் (Crash Course in Romance)
பிரபல கணித ஆசிரியர் சோய் சி-யியோல் வாழ்க்கையின் மேல் இருந்த ஆர்வம் போய்விட்டது.மற்றொருபுறம் ஹேண்ட்பால் வீராங்கனையாக இருந்த நாம் ஹேங்-சென் தன் மருமகளை வளர்க்கவும், ஊனமுற்ற சகோதரனைப் பார்த்துக்கொள்ளவும் தன் வேலையை விட்டுவிடுகிறார். சி-யியோலுக்கு ஹேங்-சென்னின் உணவு மட்டுமே பிடிப்பதால், அவர்கள் இருவரின் வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக சந்திக்கிறது. அதன் பிறகு இருவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இதன் கதை.
பிகாஸ் திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் லைஃப் Because (This is My First Life )
நாம் சே-ஹீ என்ற ஐடி ஊழியரும், யூன் ஜி-ஹோ என்ற திரைக்கதை எழுத்தாளரும் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றாக வாழ ஆரம்பிக்கிறார்கள். முதலில் இது ஒரு தொழில்முறை உறவாக இருந்தாலும், போகப்போக இருவருக்கும் காதல் மலர்கிறது.
தி டிபிக்கல் ஃபேமிலி (The Atypical Family)
ஒரு குடும்பம் தங்களிடம் இருந்த சூப்பர் பவரை குடிப்பழக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் இழக்கிறார்கள். இந்த நிலையில் இந்த குடும்பத்தின் பணத்தை அபகரிக்க நினைக்கும் டோ டா-ஹே என்ற பெண், அவர்களுடன் நெருங்கி பழகுகிறாள். அந்த பெண் வந்த பிறகு, மனச்சோர்வில் இருந்த போக் க்வி-ஜு என்ற குடும்ப உறுப்பினர், காலப் பயணம் செய்யும் தன் சக்தியை மீண்டும் பெறுகிறான். அதன் பிறகு அந்த குடும்பத்தில் நடக்கும் மாற்றங்களே இதன் கதை.