Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தீ விபத்தில் சிக்கிய நடிகர் பவன் கல்யாணின் மகன் உடல் நிலை குறித்து சிரஞ்சீவி கொடுத்த அப்டேட்

Chiranjeevi Shares Health Updates for Pawan Kalyans Son: ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார். தற்போது, ​​பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி மார்க்கின் உடல்நிலை குறித்து எக்ஸ் தள பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். 

தீ விபத்தில் சிக்கிய நடிகர் பவன் கல்யாணின் மகன் உடல் நிலை குறித்து சிரஞ்சீவி கொடுத்த அப்டேட்
பவன் கல்யாண், சிரஞ்சீவிImage Source: twitter
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Apr 2025 09:20 AM

சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் (Pawan Kalyan) இளைய மகன் மார்க் சங்கர் (Mark Shankar) பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணும் அவரது மூத்த சகோதரர் நடிகர் சிரஞ்சீவியும் (Chiranjeevi) மார்க்கை சந்திக்க சிங்கப்பூருக்கு விரைந்தனர். சிங்கப்பூரின் ரிவர் வேலி பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் இந்த தீ விபத்து சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும், கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, ​​பவன் கல்யாணின் சகோதரர் சிரஞ்சீவி மார்க்கின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மார்க் தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீதி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது “எங்கள் குழந்தை மார்க் சங்கர் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவர் இன்னும் குணமடைய வேண்டும். எங்கள் குல தெய்வமான ஆஞ்சநேய சுவாமியின் அருளாலும் கருணையாலும், அவர் விரைவில் முழுமையாக ஆரோக்கியமாகி இயல்பு நிலைக்குத் திரும்புவார்.

நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

ஹனுமான் ஜெயந்தி, அந்தச் சிறு குழந்தையை ஒரு பெரிய ஆபத்து மற்றும் சோகத்திலிருந்து காப்பாற்றினார் என்று சிரஞ்சீவி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “இந்த சந்தர்ப்பத்தில், அந்தந்த நகரங்கள் மற்றும் பகுதிகளில் உள்ள அனைவரும் எங்கள் குடும்பத்தினருடன் நின்று மார்க் சங்கர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறார்கள். அவர்கள் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள்.

என் சார்பாகவும், என் தம்பி கல்யாண் பாபு @PawanKalyan மற்றும் எங்கள் முழு குடும்பத்தின் சார்பாகவும், உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்று அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை பவன் கல்யாண் தனது இளைய மகன் மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளி தீ விபத்தில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உறுதிசெய்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார் என்றும் அந்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தினார்.

சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்
சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்...
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!
சுவிட்சுக்கு பதிலாக சிரிஞ்ச் மூலம் பல்பை ஆன் செய்யும் இளைஞர்!...
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!
பனிக்கட்டியா? வைரமா? வைரலாகும் ஐஸ்லாந்தின் டைமண்ட் பீச் வீடியோ!...
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!
திருமண பரிசாக நீல நிற டிரம்... மணமக்களுக்குக் காத்திருந்த ஷாக்!...
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!
சுந்தர் சி-யின் கேங்கர்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!...
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!
பிரச்சனையை கொண்டுவரனும் என்றே கமல் செய்வார்- கே.எஸ்.ரவிக்குமார்!...
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?
ஒரிஜினலைப் போலவே போலி ரூ.500 நோட்டுக்கள் - எப்படி கண்டுபிடிப்பது?...
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!
ஜே.டி.வான்ஸை இந்திய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி..!...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.32,000 வரை விலை குறைத்த ஹீரோ!...
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!
தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுடன் கூட்டணியா? சீமான் விளக்கம்!...
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!
கம்மி செலவில் அதிக பலன்கள்.. திராட்சை நீரில் பல பலன்கள்!...