தக் லைஃப் ப்ரஸ் மீட்டில் கமல், சிம்பு, த்ரிஷா பேசியது என்ன? முழு விவரம் இதோ!

Thug Life Movie Press Meet: த்ரிஷா சொன்ன மாதிரி விண்ணை தண்டி வருவாயா படத்துக்குப் அப்பறம் எல்லாரும் எங்க கூட்டணிய எதிர்பார்த்து காத்திருந்தாங்க. ஆனா இந்தப் படத்தில எங்க கூட்டணி மிகவும் வித்யாசமானதாக இருக்கும் என்றும் சிம்பு அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் ப்ரஸ் மீட்டில் கமல், சிம்பு, த்ரிஷா பேசியது என்ன? முழு விவரம் இதோ!

தக் லைஃப் படக்குழு

Published: 

18 Apr 2025 16:32 PM

கடந்த 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் (Maniratnam) மற்றும் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) கூட்டணி முதல் முறையாக அமைந்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெறும் வெற்றிப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்த கூட்டணி எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு 18-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு அன்று நடைப்பெற்றது. அதில் நடிகர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா பேசியது என்ன?

யாருக்குதான் இந்த மாதிரி ஒரு படக்குழு உடன் பணியாற்ற பிடிக்காது. ஆமா தக் லைஃப் படத்தில் நடிப்பது கனவு நினவானது போல இருந்தது. மிகவும் பெருமையாக உணர்கிறேன். மேலும் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய த்ரிஷா விண்ணை தாண்டி வருவாய படத்திற்கு பிறகு அடுத்து எப்போ ஒன்னா நடிப்பீங்கனு நிறைய பேர் கேப்பாங்க.

அது இப்போ நடந்து இருக்கு. விண்ணை தாண்டி வருவாயா மாதிரி இந்தப் படத்திலும் ஒரு மேஜிக் பாப்பீங்க என்று தெரிவித்தார். மேலும், கமல் சார் மற்றும் மணிரத்னம் சாருடன் பணியாற்றுவது எப்பவும் எனக்கு பிடிச்ச விசயம் என்றும் தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியது என்ன?

இந்தப் படத்தில் நடித்தது கனவு மாதிரி இருக்கு. மணி சார், கமல் சார், ரகுமான் சார் இவங்க படங்கள எல்லாம் பாக்கும் போது எப்போ இவங்க கூட சேர்ந்து பணியாற்றுவோம் என்று தோன்றும்.  அப்படி இருக்கையில் இவர்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் இணைந்து அதில் நான் நடிப்பது சரியல்லா இருக்கு.

மேலும் ஷூட்டிங்க் ஆரம்பிச்சு கொஞ்ச நாளுக்கு நடிப்பது கொஞ்சம் கடினமா இருந்துச்சு. ஏன்னா ஒருபக்கம் மணி சார் இன்னொரு பக்கம் கமல் சார் என்ன பன்றதுனே தெரியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நன்றி கமல் சார். சின்ன வயசுல இருந்து குழந்தை நட்சத்திரமா இருந்ததில் இருந்து நடித்து வருகிறேன்.

அவர் எனக்கு திரையுலக குரு. அவரிடம் இருந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். இந்தப் படத்தில் அவர் எனக்கு ஸ்பேஸ் கொடுத்திருக்காரு அதுக்கு ரொம்ப நன்றி. மேலும் படத்தப் பத்தி நான் நிறைய பேசப்போறது இல்ல மணி சார் வேறமாதிரி ஒன்னு பன்னியிருக்கார் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியது என்ன?

நானும் மணிரத்னமமும் சந்திக்கும்போது எல்லாம் பேசியதில் 25 சதவீதத்தை இந்தப் படத்தில் பன்னியுள்ளோம். நாங்கள் இருவரும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். மேலும் இத்தனை ஆண்டுகளாக எங்கள் கூட்டணிக்காத காத்திருந்த மக்களிடம் மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்க எங்களை எவ்வளவு உயரத்தில் வச்சுருக்கீங்கனு தெரியாம போச்சு. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும்.

சிம்பு குறித்து பேசுகையில் சிம்பு ஓட அப்பாவிற்கு என்ன பிடிக்கும்னு சொல்றதவிட பாசம். எனக்கு எதாவது ஒன்னுன்னா அவர் அழுதுடுவார். அப்படி இருக்கையில் அடுத்த தலைமுறை சிம்பு எப்படி இருப்பார்னு நினச்சேன். ஆனா பாசத்துல அவர் எட்டு அடினா இவரு பதினாரு அடி என்று தெரிவித்தார்.

மேலும் ஜோஜூ ஜார்ஜ் குறித்து பேசிய கமல், இந்தப் படத்தில இரண்டு நாயகிகள் இருக்காங்க. ஆனா அவங்க ஒரு தடவ கூட எனக்கு லவ் யூ சொல்லல. ஆனா ஜோஜூ ஷூட்டிங் காலைல வரும் போதே தூரதில இருந்து ஐ லவ் யூ சார்னு கத்திட்டே வருவார் தினமும் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.