Suriya : சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் எப்போது? நியூ அப்டேட் இதோ!

Vaadivasal Movie Shooting Update : முன்னணி இயக்குநராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் சில படங்கள் வெளியாகியிருந்தாலும் ஒவ்வொரு படமும் தரமாக இருக்கும். இவரின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டு கதைக்களத்துடன் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Suriya  : சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்போது? நியூ அப்டேட் இதோ!

சூர்யாவின் வாடிவாசல்

Published: 

29 Apr 2025 14:56 PM

நடிகர் சூர்யாவின்  (Suriya) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ள நிலையில், முன் பதிவில் அதிரடியாக கலெக்ஷ்ன் செய்து வருகிறது. இந்த படமானது உலகளாவிய ரிலீஸில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா 45 (Suriya 45) மற்றும் தெலுங்கில் புதிய படம் என அடுத்தடுத்த படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களுக்கு எல்லாம் முன்பே நடிகர் சூர்யா நடிக்கவிருந்த படம் வாடிவாசல் (Vaadivasal). இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகளானது வெளியாகி 2 ஆண்டுகளைக் கடந்த நிலையில், மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனும் சரி, நடிகர் சூர்யாவும் சரி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்த நிலையில், இந்த படமானது தள்ளிக்கொண்டே போனது. இந்த 2025ம் ஆண்டு வாடிவாசல் திரைப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக ஆரம்பமாகும் என நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தனர்.

அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய நியூ அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது தினத்தந்தி செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டை கேட்டு ரசிகர்களை உற்சாகமடைந்துள்ளனர்.

வாடிவாசல் படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் சூர்யாவின் கிராமத்து கதைக்களத்துடன் உருவாகும் இந்த படமானது ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்த படத்தை வி ப்ரொடக்ஷ்ன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா45 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா தெலுங்கில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இந்த படம் வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.