அன்பே சிவம் படத்தில் இப்போ இருக்கும் இந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் – சுந்தர் சி ஓபன் டாக்
Sundar C about Anbe Sivam Movie: சுந்தர் சி இயக்கத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் உருவான மத கஜ ராஜா படம் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இவரின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் காமெடியில் எப்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது வழக்கம்.

இயக்குநர் மற்றும் நடிகரகாக வலம் வரும் சுந்தர் சி இயக்கத்தில் முன்னதாக வெளியான சில படங்களில் தற்போது உள்ள எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஈரோடு மாட்டத்தில் 1966-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பிறந்தார் சுந்தர் சி. மணிவன்னனிடம் உதவியாளராக இருந்த இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான முறைமாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணி ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்திருப்பார்கள். இவர்களின் அக்கா மகளாக குஷ்பு நடித்திருப்பார். காமெடி ஜானரில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகர் கார்திக் நடிப்பில் அடுத்தடுத்து உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி ஆகிய படங்களை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து 1997-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அருணாசலம் படத்தை இயக்கினார்.
எதுவுமே இல்லனு நினைச்ச ஒருத்தருக்கு எதிர்பாராத விதமாக பலகோடி பணம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ஃபேண்டசி படமாக இந்தப் படத்தை இயக்கியிருப்பார் சுந்தர் சி. இந்தப் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. அதனை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார்.
படங்களை இயக்குவது மட்டும் இன்றி படங்களில் நடிப்பதும் தொடர்ந்து செய்து வருகிறார் சுந்தர் சி. முன்னதாக படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த சிந்தர் சி 2006-ம் ஆண்டு இயக்குநர் சூரஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தின் மூலம் நாயகான அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனை தொடர்ந்து பல படங்களில் மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் நாயகனாகவும், தானே இயக்கிய படங்களில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார் சுந்தர் சி. 2014-ம் ஆண்டு முதல் இவர் இயக்கி நடித்த அரண்மனை படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இரண்டு பாகங்களும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து 2021-ம் ஆண்டு அரண்மனை படத்தின் 3-ம் பாகமும், 2024-ம் ஆண்டு 4-ம் பாகமும் வெளியானது. அதே அரண்மனை பேய் காமெடி என்றாலும் எத்தனை பார்ட் எடுத்தாலும் வெற்றிதான் என ரசிகர்கள் வசூலை குவித்தபோதே தெரிந்தது.
இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் முன்னதாக வெளியான படத்தில் தற்போது இருக்கும் நடிகர்கள் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதில் கமல் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் படத்தில் விஜய் சேதுபதியும் அசோக் செல்வனும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.