அருண் விஜய்யின் முதல் படத்திலிருந்து பாதியில் விலகிய சுந்தர்.சி – படத்தை முடித்துக்கொடுத்த பிரபல இயக்குநர்

Sundar C : கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயக்குநராக வலம் வருகிறார் சுந்தர்.சி. கடந்த வருடம் வெளியான அரண்மனை 4 ஹிட்டாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 12 ஆண்டுகளாக வெளியாமல் இருந்த இவரது மத கஜ ராஜா இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு பெரும் வெற்றிபெற்றது.

அருண் விஜய்யின் முதல் படத்திலிருந்து பாதியில் விலகிய சுந்தர்.சி - படத்தை முடித்துக்கொடுத்த பிரபல இயக்குநர்

அருண் விஜய் - சுந்தர்.சி

Published: 

22 Mar 2025 05:51 AM

இயக்குநர் மணிவண்ணனிடம் (Manivannan) உதவி இயக்குநராக பணியாற்றிய சுந்தர்.சி (Sundar.C) கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாமன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சரத்குமாரை வைத்து ஆக்சன் படமாக எடுக்க நினைத்த சுந்தர்.சிக்கு அவரது கால்ஷீட் கிடைக்காததால் அதே கதையை சற்று மாற்றி ஜெயராமை (Jayaram) வைத்து காமெடி படமாக இயக்கியிருந்தார். ஜெயராம், கவுண்டமணி, செந்தில், மனோராமா என போட்டிக்கொண்டு காமெடியில் ஸ்கோர் செய்ய அந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அவரது அடையாளம் காமெடி என்றானது. அன்பே சிவம் போன்ற சீரியஸான படத்தில் கூட துவக்க காட்சிகளில் கமல் – மாதவன் உரையாடல்களைக் காமெடியாக படமாக்கியிருப்பார்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இயக்குநராக வலம் வருகிறார் சுந்தர்.சி. கடந்த வருடம் வெளியான அரண்மனை 4 ஹிட்டாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 12 ஆண்டுகளாக வெளியாமல் இருந்த இவரது மத கஜ ராஜா இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு பெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக அந்தப் படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மத கஜ ராஜா வெளியாகாததால் அந்தப் படத்தில் இருந்து ஒரு காமெடி காட்சியை அடிப்படையாகக் கொண்டு கலகலப்பு படத்தின் 3 ஆம் பாகத்தை சுந்தர்.சி எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக மத கஜ ராஜா வெளியானதால் அந்த முடிவை சுந்தர்.சி கைவிட்டிருக்கிறார்.

ஹீரோவாக சுந்தர்.சியின் பயணம்

மணிவண்ணனிடம் பணியாற்றியபோது அவரது இயக்கத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடித்திருந்த வண்டி சக்கரம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் சுந்தர்.சி நடித்திருந்தார். பின்னர் தனது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த அருணாச்சலம் படத்தில் ரிப்போர்டராக ஒரு சிறு வேடத்தில் தோன்றியிருப்பார். பின்னர் தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுராஜின் இயக்கத்தில் தலைநகரம் படத்தில் ஹீரோவாக நடித்தார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான அபிமன்யூ படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. குறிப்பாக இந்தப் படத்தில் நாய் சேகர் கதாப்பாத்திரத்தில் நடித்த வடிவேலுவின் காமெடி ரசிகர்களைப் பெரிதும் கவர, நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற பெயரில் தனிப்படமாகவே வந்தது குறிப்பிடத்தக்கது. இனைத் தொடர்ந்து நகரம் மறு பக்கம், தலைநகரம் 2 என அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகின. தலைநகரம் படத்தைத் தொடர்ந்து சுநதர்.சி நடித்த வீராப்பு, சண்டை படங்கள் வெற்றிபெற்றாலும் அதனைத் தொடர்ந்து படங்களின் தொடர் தோல்வியால் கலகலப்பபு மூலம் மீண்டும் இயக்குநரானார்.

அருண் விஜய்யின் முதல் படத்தில் தயாரிப்பாளருடன் சுந்தர்.சிக்கு ஏற்பட்ட பிரச்னை

சுந்தர்.சி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கிவருகிறார். இந்த நிலையில் முறை மாமன் படத்துக்கு பிறகு முறை மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு படத்தை துவங்கினார் சுந்தர்.சி. இந்தப் படம் தான் நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய்யின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய் ஹீரோவாக அறிமுகமான முறை மாப்பிள்ளை என்ற படத்தை துவங்கினார். படப்பிடிப்பின் போது தயாரி்பபாளர் அன்பாலயா பிரபாகரனுக்கும் இடைய உருவான கருத்து வேறுபாட்டால் சுந்தர்.சி பாதியில் வெளியேறியதாக கூறப்படுகிறது. மீதமுள்ள படத்தை தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனும், மைனா, கும்கி படங்களின் இயக்குநர் பிரபு சாலமனும் இணைந்து நிறைவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் வணங்கான் தொடர்பான பேட்டியில் அருண் விஜய் தெரிவித்திருந்தார். முறை மாப்பிள்ளை படத்தில் தனக்கு உதவியதன் காரணமாக பிரபு சாலமனுக்கு அவரது முதல் பட வாய்ப்பான கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார்.