Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அவர் ரேஞ்சில் பாடுறது கஷ்டம் – கமலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் புகழாரம்!

தசாவதாரம் படத்தில் கமல் பத்து விதமான கதாப்பாத்திரங்களுக்கு ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்திக்காட்ட தன் குரலை மாற்றி மாற்றி டப்பிங் செய்திருப்பார். அந்தப் படம் தெலுங்கில் வெளியான போது தமிழில் கமல் எந்த அளவுக்கு மெனக்கெட்டிருப்போரோ, அதற்கு சமமாக தனது குரலால் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்பி பாலசுப்ரமணியம்.

அவர் ரேஞ்சில் பாடுறது கஷ்டம் – கமலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் புகழாரம்!
எஸ்.பி.பாலசுப்ரமணியம் - கமல்ஹாசன்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 25 Mar 2025 08:55 AM

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம் (S.P.Balasubrahmanyam). எம்.எஸ்.விஸ்வவநாதன் இசையில் கடந்த 1969 ஆம் ஆண்டு வெளியான சாந்தி நிலையம் படத்தில் இடம் பெற்ற இயற்கை எனும் என்ற பாடல் தான் எஸ்பிபி பாடிய முதல் பாடல். ஆனால் அடிமைப் பெண் படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல் முதலில் வெளியாகி அதுவே அவரது முதல் பாடலாக அமைந்துவிட்டது. இளையராஜா (Ilaiyaraaja) தனது சகோதரர்களான பாஸ்கர், கங்கை அமரன் (Gangai Amaran) ஆகியோர் இணைந்து இசைக் குழு நடத்தி வந்த நேரத்தில் அவர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.

முதல் மரியாதை படத்தில் நடிக்க எஸ்பிபிக்கு வந்த வாய்ப்பு

கேளடி கண்மனி தொடங்கி, சிகரம், குணா, திருடா திருடா, காதலன், பிரியமானவளே ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் எஸ்பிபி. இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனது முதல் மரியாதை படத்துக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் முதல் சாய்ஸாக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் பாடகராக பிஸியாக இருந்த காரணத்தால் நடிக்க மறுத்திருக்கிறார். சிகரம், உன்னை சரணடைந்தேன் போன்ற பல படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கில் கமல்ஹாசனின் குரலாகவே மாறிய எஸ்பிபி

நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ்பிபியின் குரல் அவ்வளவு பொறுத்தமாக இருக்கும். அவருக்கு எண்ணற்ற பாடல்களை எஸ்பிபி பாடியிருக்கிறார். தெலுங்கில் கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு இவர் தான் பின்னணி குரல் கொடுத்திருப்பார். நேரடி தெலுங்கு படங்களில் கமலே தனக்கு டப்பிங் செய்துகொள்வார். தெலுங்கில் கமல் படங்களுக்கு என மிகப்பெரும் மார்கெட் இருக்கிறது. தமிழுக்கு இணையாக கமலை தெலுங்கில் கொண்டாடுவார்கள். கமலின் பல படங்கள் தமிழிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டால் கமலுக்கு எஸ்பிபி தான் டப்பிங் செய்வார். அதே போல ரஜினிகாந்த்தின் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானால் அவருக்கு மனோ தான் டப்பிங் செய்வார்.

கமலின் பல படங்களை தெலுங்கில் விநியோகித்து லாபம் சம்பாதித்திருக்கிறார் எஸ்பிபி.  தசாவதாரம் படத்தில் கமல் பத்து விதமான கதாப்பாத்திரங்களுக்கு ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்திக்காட்ட தன் குரலை மாற்றி மாற்றி டப்பிங் செய்திருப்பார். அந்தப் படம் தெலுங்கில் வெளியான போது தமிழில் கமல் எந்த அளவுக்கு மெனக்கெட்டிருப்போரோ, அதற்கு சமமாக தனது குரலால் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்பிபி.

பாடகராக கமலின் திறமை

இந்த நிலையில் தொகுப்பாளரும் கிரிக்கெட் விமர்சகருமான பாஸ்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஸ்பிபியை அவரது யூடியூப் சேனலுக்காக நேர்காணல் செய்திருந்தார். அப்போது அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வச்சா பாடலை கமலும் எஸ்பிபியும் தனித்தனியாக பாடியிருப்பதை ஒப்பிட்டு பேசினார். அவருக்கு விளக்கமளித்த எஸ்பிபி, அவர் ரேஞ்சில் பாடுறது ரொம்ப கஷ்டம். ரொம்ப மேல பாடுவார். சீர்காழி அண்ணன் ரேஞ்சில் பாடுவார். அவர் பேசுவதை கேட்கும்போது இந்த ஹைபிட்ச்சில் பாட முடியுமா என நினைப்போம். அவர் சிறந்த பாடகர். டெக்னிக்கலாக துல்லியமாக தெரிந்தவர். எங்கேயும் சிறிய அளவுக்கு கூட அபசுரம் பாடியது இல்லை.

பாலமுரளிகிருஷ்ணாவிடம் பாடல் பயின்றார். அவரும் என் தங்கையும் பாலகிருஷ்ணாவிடம் கற்றார்கள். கமல்ஹாசன் கையவெச்சா பெர்வெக்ட்டா இருக்கும். ஆனால் அவர் மெலோடி பாடல்களை விரும்பமாட்டார். அதில் எதாவது பெர்ஃபார்மன்ஸ் இருக்கனும். ஒன்ன விட மாதிரியான சில மெலோடியஸ் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட 16 மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கிறார்.

பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..?
பயணிகளே..! புறநகர் ஏசி ரயில் எப்போதெல்லாம் இயக்க வேண்டும்..?...
வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்
வில்லன் ரோல் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்...
வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?
வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?...
அட! ஒரு மாத்திரை அளவில் பேஜ்மேக்கர் கண்டுபிடிப்பா?
அட! ஒரு மாத்திரை அளவில் பேஜ்மேக்கர் கண்டுபிடிப்பா?...
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!
4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்!...
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!
இந்த 3 பறவைகள் கனவில் வந்தால் நல்லது நடக்கும்!...
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா
குன்றின் மேல் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.. இந்த கோயில் தெரியுமா...
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு
ஒற்றுமை “ஒரே கோயில், ஒரே கிணறு, ஒரே சுடுகாடு” -மோகன் பகவத் பேச்சு...
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?
முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்குமா KKR..?...
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?...
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!
ஏப்ரல் 26, 27-ல் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம்!...