சந்தானம் படத்தின் இயக்குநருடன் இணையும் நடிகர் ரவி மோகன்?
நடிகர் ரவி மோகனின் சினிமா வாழ்க்கை மிகவும் பரப்பரப்பாக இருந்து வரும் நிலையில் அவரது சொந்த வாழ்க்கை தொடபாகவும் அவர் அவ்வப்போது செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை இவர் பிரிவதாக அறிவித்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகியுடன் (Karthik Yogi) நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) அடுத்தப் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல திரைப்பட எடிட்டர் மோகனின் இளைய மகன் தான் நடிகர் ரவி மோகன். ரவி மோகனின் அண்ணன் மோகன் இயக்குநர் ஆவார். இந்த நிலையில் இயக்குநர் மோகன் இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்தப் படம் ஜெயம். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்தார். இந்தப் படம் 2003-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. அப்போ இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இவரை ரசிகர்கள் ஜெயம் ரவி என்று அன்போடு அழைத்து வந்தனர். அவரும் தன்னை எல்ல இடங்களிலும் ஜெயம் ரவி என்றே குறிப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெயரை இனி ரவி மோகன் என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று ரசிகர்களை அன்புடன் கேட்டுக் கொண்டார். ஜெயம் படத்திற்கு பிறகு நடிகர் ரவி மோகனின் நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும் என பல ஹிட் படங்களை கொடுத்தார்.
தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், எங்கேயும் காதல், தனி ஒருவர், கோமாளி, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரவி மோகனின் சினிமா வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் காதலிக்க நேரமில்லை.
இந்தப் படத்தை இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மிகவும் வித்யாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகனின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
Swaamiye Sharanam Ayyappa 🙏🏼 pic.twitter.com/G96hkr5xda
— Ravi Mohan (@iam_RaviMohan) April 14, 2025
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரவி மோகனின் நடிப்பில் பராசக்தி, கராத்தே பாபு மற்றும் ஜீனி ஆகிய படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இதில் கராத்தே பாபு மற்றும் ஜீனி ஆகிய படங்களில் இவர் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படங்களின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது அடுத்தப் படத்திற்கான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் கசிந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் யோகி இந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் பிரமோத் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.