அல்லு அர்ஜுன் – அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் அப்டேட்
Allu Arjun and Atlee Movie Update: இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அல்லு அர்ஜுன் - அட்லி
டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரது நடிப்பில் முன்னதாக வெளியான புஷ்பா 2 படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி (Atlee) இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் லுக் டெஸ்ட் மும்பையில் பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
AA22 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரூபாய் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தப் படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சுமார் ரூபாய் 175 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லி 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழில் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை தொடர்ந்து விஜயுடன் இணைந்து பணியாற்றினார். இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டிற்கு பறந்தார் இயக்குநர் அட்லி.
தனது ஐந்தாவது படத்திற்காகவே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் இயக்குநர் அட்லி. அதன்படி இவரது இயக்கத்தில் 2023-ம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூபாய் 1000 கோடி வசூலை தாண்டி பாலிவுட்டையே அதிர வைத்தது குறிப்பிடதக்கது.
AA22 படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ பதிவு:
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir #SunPictures #AA22 #A6 pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
இந்த நிலையில் தனது 6-வது படத்திற்காக இயக்குநர் அட்லி ரூபாய் 100 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சினிமா வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, நடிகர் அல்லு அர்ஜுனும் இயக்குநர் அட்லியும் மும்பையில் லுக் டெஸ்ட் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த படம் ஜூன் 2025 முதல் படப்பிடிப்பை தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.