55 வயதை கடந்தும் திருமணத்திற்கு நோ சொல்லும் நடிகை சோபனா… அவரே சொன்ன காரணம்
Actress Shobana About Marriage: நடிகர் மோகன்லால் உடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சோபனா துடரும் படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கியுள்ளார்.

நடிகை சோபனா
மலையாளம், தமிழ் தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களின் நாயகியாக நடித்த சோபனா (Actress Shobana) தற்போது 55 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது. கடந்த 1970-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகை சோபனா. 1980-ம் ஆண்டு நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான மங்கல நாயகி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நடிகை சோபனா. மலையாள திரையுலகின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆன நடிகை சோபனா 1984-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் (Enakkul Oruvan) படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நாயகியாக தோன்றினார்.
அதனை தொடர்ந்து அவ்வப்போது நடிகர்கள் ரஜினிகாந்த், பாக்கியராஜ், சத்தியராஜ் ஆகியோரின் படங்களில் நாயகியாக நடித்தார் சோபனா. தமிழில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் குறைவுதான் என்றாலும் ரசிகரக்ளின் மனதில் இன்றும் இவர் இடம் பிடித்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கி, கன்னடா, இந்தி என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை சோபனா. தமிழில் இறுதியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து மற்ற மொழி படங்களிலும் அவ்வப்போது நடித்து வரும் இவர் முழு நேரம் தனது நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதுமட்டும் இன்றி தேர்ந்த் பரதநாட்டிய கலைஞரான இவர் அதற்கான பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் கலார்ப்பனா என்ற நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் நடிகை சோபனா. கடந்த 2006-ம் ஆண்டில், கலைகளுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
சமீபத்தில் நடிகை சோபனாவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திரையுலகினர் பலர் நடிகை சோபனாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகை சோபனா குறித்த பல தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை சோபனா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி தற்போது நடிகை சோபனாவிற்கு 55 வயதாகிறது. ஆனால் இதுவரை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சோபனா, திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலும், திருமணம் செய்தால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பறிபோகும் என்ற காரணத்தினால் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.